விமர்சகர்கள் கருத்து

    • சந்தீப்பின் அப்பா ஒரு ஏட்டு. தவறான சிகிச்சையால் உயிரிழக்கிறார். சந்தீப்பின் நெருங்கிய நண்பன் விக்ராந்த். சந்தீப்பின் டாக்டர் தங்கைக்கும் விக்ராந்துக்கும் காதல். நண்பனுக்குத் தெரிந்தால் பிரச்சினையாகுமே என விக்ராந்த் பயப்படுகிறான்.

      ஆடிட்டர் ஒருவர் தன் மகளுக்கு எப்படியாவது மெடிக்கல் காலேஜில் எம்டி சீட் வாங்க வேண்டும் என ஹரீஷ் உத்தமன் என்ற கொடூர தாதாவை அணுகுகிறார். சந்தீப்பின் தங்கையும் எம்டி சீட்டுக்கு செலக்ட் ஆகியிருக்கிறாள். இந்த விவரங்களைத் தெரிந்து கொண்ட தாதா, சந்தீப்பின் தங்கையைக் கொன்று, அந்த சீட்டை ஆடிட்டர் மகளுக்குக் கிடைக்க ஏற்பாடு செய்கிறான். தங்கையை மட்டும் கொன்றால் பிரச்சினை வரும், எனவே அவள் காதலனையும் போட்டுத் தள்ளிவிட வேண்டும் என திட்டம் போடுகிறான்.

      சுசீந்திரன் நல்ல மேக்கர். அவருக்குத் தேவை நல்ல கதைகள். ஆபாசம், வக்கிரமில்லாத காட்சிகள் என்பதால் குடும்பத்தோடு பார்க்கத் தடையில்லை, நெஞ்சில் துணிவிருந்தால்.