விமர்சகர்கள் கருத்து

    • பிங்க் படத்தை அப்படியே எடுக்காமல், அதில் சில மாற்றங்களை செய்து தமிழ் ரசிகர்களுக்கு, குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு ஏற்ற மாதிரி கொடுத்திருக்கிறார் இயக்குனர் எச்.வினோத். ஒரிஜினல் படத்தில் அபிதாப் ஒரு குடிகாரர். ஆனால் இந்த அஜித் ஒரு மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு நோயாளி. இந்த மாற்றம் நிச்சயம் வரவேற்க வேண்டிய விஷயம். ஏனெனில் அஜித்தை குடிகாரராக காட்டாமல் இருந்தது, அவரது ரசிகர்கள் மீது வினோத்துக்கு இருக்கும் அக்கறையை காட்டுகிறது