twitter
    Tamil»Movies»NGK»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • புதுப்பேட்டை படத்தின் திரைக்கதையை அப்படியே என்ஜிகேவுக்கு பயன்படுத்தி இருக்கிறாரோ செல்வா என்றே எண்ணத் தோன்றுகிறது. புதுப்பேட்டையில் ஜெயிலுக்குள் இருந்தபடி கொக்கி குமார் தனது கதையை சொல்வது போல், இப்படத்தில் எக்ஸ்ட்ரீம் குளோஸ்அப் ஷாட்டில், எங்கோ அமர்ந்தபடி கதை சொல்கிறார் சூர்யா. ஆனால், கொக்கிகுமார் அளவுக்கு நம் மனதில் சூர்யா பதியவில்லை என்பது தான் உண்மை.

      முதல்பாதி படத்தில் சுமார் 45 நிமிடங்கள் வரை சுவாரஸ்யமான காட்சிகளே இல்லை. படத்தோட பேரு மாதிரி காட்சிகளின் நீளத்தையும் சுருக்கியிருக்கலாம். அதை செய்யத் தவறி இருக்கிறார்கள்.

      இரண்டாம் பாதியில் மருந்துக்கூட அதுபோன்ற சுவாரஸ்யமான காட்சிகள் எதுவும் இல்லை. ஒரு படித்த இளைஞன், பெரிய கட்சியில் அடிமட்ட தொண்டனாக சேரும் போது, அவன் எப்படி எல்லாம் நடத்தப்படுவான், எந்த அளவுக்கு கீழே இறங்கி வேலை செய்ய வேண்டி வரும் என்பதை உண்மையாக சொல்ல நினைத்திருக்கிறார் செல்வா. ஆனால் அதில் சினிமாத்தனமே மேலோங்கி இருக்கிறது.