twitter
    Tamil»Movies»Odu Raja Odu»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • ஒரு சின்ன துண்டு பேப்பரில் விரிவாக எழுதிவிடலாம் இப்படத்தின் கதையை. ஆனால் படத்தில் வரும் கதாபத்திரங்களை பற்றி எழுத வேண்டும் என்றால் ஒரு நோட்டு பத்தாது. அவ்வளவு கதாபாத்திரங்கள். ஒவ்வொரு கதாபாத்திரமும் பார்வையாளர்களின் மனதில் நிற்க வேண்டும் என்பதற்காக, சீட்டாகை, அன்புள்ள அரிப்பு, போதை மாமி, துணை மாப்பிள்ளை, ஒப்புக்கு சப்பான்ஸ் என ஒவ்வொருவருக்கும் ஒரு அடைமொழி, தனித்தனி ப்ளாஷ்பேக் காட்சிகள். கதாபாத்திரங்களின் அறிமுகங்கள் முடியும் போது இடைவேளை வந்துவிடுகிறது.

      ஆனால் இதற்காக இயக்குனர்களை ஒட்டுமொத்தமாக குறைசொல்லிவிட முடியாது. டார்க் ஹியூமர் கதை என்பதால் படத்தில் வரும் அத்தனை கதாபாத்திரங்களுக்கு நியாயம் செய்ய நினைத்திருக்கிறார்கள் இரட்டை இயக்குனர்கள் நிஷாந்தும், ஜத்தினும்.

      படத்தில் பல இடங்களில் நகைச்சுவை காட்சிகள் திணிக்கப்பட்டிருப்பது துரித்திக்கொண்டு தெரிகிறது. அதுவும் பெண்களை செக்ஸ் பொருளாக காட்டியிருப்பது அவசியமற்றது. எப்போது பார்த்தாலும் கஞ்சா புகைக்கும் நண்பன், செக்ஸ் உணர்வோடு அழையும் பக்கத்து வீட்டுக்காரன், கணவனையும் அவனது நண்பனையும் ஒன்றாக பாக்கும் ஆகிஷா, பீட்டருடன் செக்ஸ் வைத்துக்கொள்ளும் சோனா என பல தேவையற்ற விஷயங்கள் நிறைந்திருக்கின்றன. அதுவும் அந்த பவர் ஸ்டார் சேசிங் சீனெல்லாம் ஐயோயோயோ என புலம்ப வைக்குது.

      தோஷ் நந்தா இசையில் பாடல்கள் எதுவும் மனதில் ஒட்டவில்லை. அதேபோல பின்னணி இசையும் பிளாக் காமெடி உணர்வை தர மறுக்கிறது. திரைக்கதை எழுதி படத்தொகுப்பை கவனித்திருக்கிறார் நிஷாந்த். இத்தனை கதாபாத்திரங்களையும் ஒன்று சேர்க்க படாதபாடு பட்டிருக்கிறார்.