விமர்சகர்கள் கருத்து

    • ஒரு பள்ளி வகுப்புறையில் சில பல கேமராக்களை பொருத்தி வைத்து, கேன்டிட்டாக பதிவு செய்தால் எப்படி இருக்குமோ, அப்படித் தான் இருக்கிறது ஒரு அடார் லவ். பதின்வயது பள்ளி மாணவர்கள், ஒருவருக்கொருவர் எப்படி ஈர்க்கப்பட்டு காதலில் விழுவார்கள், அவர்களுக்குள்ளான நட்பு, காதல், காமெடி, சண்டை என எல்லாமே மிக எதார்த்தமாக இருக்கிறது.

      வாட்ஸ்அப், பேஸ்புக், டிவிட்டர்னு ஏற்கனவே நம்ம பசங்க பண்ணும் அலம்பல் தாங்க முடியல. இதுல இந்த படத்த வேற பார்த்துட்டு வந்து என்ன பண்ண போறாங்களோ என்ற எண்ணம் தான் ஒரு அடார் லவ் பார்க்கும் பெற்றோருக்கு ஏற்படும். ஆனால் இது அவர்களுக்கான படம் அல்ல. இளமை காதலின் இனிமையை ருசிக்க காத்திருக்கும் இளைஞர்களின் கொண்டாட்டம் தான் ஒரு அடார் லவ்.