twitter

    விமர்சகர்கள் கருத்து

    • ஆஸ்கர் வென்று இந்தியாவை பெருமைப்படுத்திய ரசூல், இந்த படத்தின் நாயகனாக நடித்துள்ளார். நிஜத்தில் எப்படி நடந்துகொள்வாரோ, அப்படி தான் திரையில் தெரிகிறார். கண் பார்வையற்றவர்களுக்காக அவரது மெனக்கெடல்கள் உருக்கமான காட்சிகளாக இருக்கின்றன.

      படத்தை வெறும் காட்சிகளாக மட்டும் இல்லாமல், ஒலியால் செதுக்கி இருக்கிறார் ரசூல். ஒவ்வொரு சப்தத்தையும் தனித்தனியாக உணர முடிகிறது. டைட்டில் கார்டில் பின்னால் ஒலிக்கும் ஆஸ்கர் விருது விழா உரையாடலே, இது என்ன மாதிரியான படம் என்பதை உணர்த்திவிடுகிறது.

      குறிப்பாக பூரம் திருவிழாவின் சண்ட மேளமும், யானை பிளிரலும், வான வேடிக்கை ஒலியும் அற்புதமான உணர்வை ஏற்படுத்துகின்றன. சவுண்ட் என்ஜினியரிங் மாணவர்கள் நிச்சயம் பார்க்க வேண்டிய படம் இது. மற்றபடி, இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் என அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களும் தங்கள் பணியை சரியாக செய்துள்ளனர்.