twitter
    Tamil»Movies»Oru Kuppai Kadhai»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • செய்திகளில் படித்து கடந்து போகும் ஒரு கள்ளக்காதல் விவகாரத்துக்கு பின்னால் இருக்கும் பாதிப்புகளையும், பிரச்சினைகளையும், எந்த சினிமாத்தனமும் இல்லாமல் யதார்த்தமாக சொல்லி இருக்கிறார் அறிமுக இயக்கு காளி ரெங்கசாமி. பிடிக்காத வாழ்வைவிட்டு வெளியேறி, பிடித்த வாழ்க்கை தேர்ந்தெடுக்க ஒரு பெண்ணுக்கு இருக்கும் உரிமையை நியாயப்படுத்தி இருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள். அதே நேரத்தில் தான் தேர்ந்தெடுக்கும் ஆண் தவறானவனாக இருக்கும் பட்சத்தில் அந்த பெண்ணின் வாழ்க்கை எப்படி பாதிக்கும் என்பதையும் யதார்த்தமாக சொல்லியிருக்கிறார். தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், மனிதர்களின் மனம் எந்தளவுக்கு மாசுப்பட்டு போகியிருக்கிறது என்பதையும், உண்மையான அன்பும், அக்கறையும் எளிய மனிதர்களிடம் நிரம்பி கிடக்கின்றன என்பதையும் அழகியலோடு காட்சிப்படுத்தி இருக்கிறார். குப்பை அள்ளும் தொழிலாளியாக வாழ்ந்து காட்டியிருக்கிறார் அறிமுக நாயகன் தினேஷ் மாஸ்டர். பெண் கிடைக்காமல் ஏங்குது, மனைவியை உயிருக்கு உயிராய் காதலிப்பது, பிடித்த வேலையை மனைவிக்காக விடுவது, அவரின் துரோக்கத்தை தாங்க முடியாமல் குடிகாரனாகி ரோட்டில் விழுந்து கிடப்பது என ஒரு யதார்த்த நாயகனாக அசத்தி இருக்கிறார். மாஸ்டர் இனி நடிப்பிலும் பிசியாகி விடுவார் என எதிர்பார்க்கலாம். ஆனால் முகத்தை ஒரே மாதிரியாக வைத்திருப்பதை மட்டும் தவிர்த்திருக்கலாம். இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம் மாஸ்டர்.

      குடும்ப உறவுகள் அர்த்தமற்றதாக மாறிக்கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில், இப்படி ஒரு பதிவு அவசியம் என்பதால், 'ஒரு குப்பைக் கதை'யை பாராட்டலாம்.