twitter
    Tamil»Movies»Papanasam»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்ற ஒரு நல்ல திரைக்கதை... கமலை வைத்துக் கொண்டு அதில் இம்மியளவுக்குக் கூட மாற்றமோ சமரசமோ இல்லாமல் பாபநாசமாகக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஜீத்து ஜோசப்.

      பொதுவாக கமல் ஹாஸன் படங்களில் அவர் ஏற்கும் பாத்திரத்தை மீறி, ஒரு நடிகர் என்பது தனித்துத் தெரியும். அதை ஒரு விமர்சனமாகவும் அவர் மீது வைப்பார்கள். இந்தப் படத்தைப் பொறுத்தவரை, அவரது நெல்லை வட்டார வழக்கு தவிர்த்துப் பார்த்தால், எங்கும் கமல் என்ற நடிகர் தெரியவில்லை. சுயம்புலிங்கம்தான் தெரிகிறார். அவர் இத்தனை 'ஸ்ட்ரிக்டாக' நெல்லைத் தமிழைப் பேசியிருக்க வேண்டிய அவசியமும் இல்லை.

      இந்த காலகட்டத்துக்கு நிச்சயம் இப்படிப்பட்ட படங்கள் அவசியம். கட்டாயம் பார்க்க வேண்டிய படம்!