விமர்சகர்கள் கருத்து

  • வண்ணமயமான லொகேஷன்கள், அழகான நாயகன், அம்சமான நாயகன், விதவிதமான கார்கள், கொட்டியிறைக்க தயாரிப்பாளர் எல்லாம் இருந்தும், சுவாரஸ்யமான கதை இல்லாத படம் எப்படியிருக்கும்?

   பாவம் கதைப் பஞ்சம் தமிழ் சினிமாவை எப்படியெல்லாம் பாடாய்ப்படுத்துகிறது என்பதற்கு இன்னுமொரு உதாரணம் இந்தப் படம்.

   படத்தின் ட்ரைலர், பாடல்கள் பார்த்தபோது ஐ என்ற அஞ்சாதவாசத்திலிருந்து கலர்புல்லாக மீண்டு வந்திருக்கிறார் விக்ரம் என்று தோன்றியது. படம் பார்த்தால்தான் தெரிகிறது, இவர் அதல பாதாளத்துக்குப் போய்க் கொண்டிருக்கிறார் என்பது.

   படம் பார்த்து முடித்தபோது, பத்து எண்றதுக்குள்ள இந்த மாதிரி படங்கள் முடிந்துவிடக் கூடாதா என்ற நினைப்புதான் மேலோங்கியது!!