twitter
    Tamil»Movies»Pencil»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • இதுவும் ஒரு கொரியப் பட ரீமேக்தான். ஜிவி பிரகாஷ் ஹீரோவாக நடித்த முதல் படம். ஆனால் மூன்றாவது படமாக வெளியாகி இருக்கிறது. இந்தப் பென்சில் ஷார்ப்பா.. மொக்கையா? பார்ப்போம்.

      முதல் பாதியை நன்றாகவே எடுத்திருக்கிறார்கள். ஆனால் இரண்டாவது பாதியில் மொத்த விசாரணையை மாணவர்களே கையிலெடுத்து களமிறங்குவது நம்பும்படி இல்லையே!

      ஜிவி பிரகாஷுக்கு இந்த வேடம்தான் ரொம்பப் பொருத்தமாக இருக்கிறது. வயது, முகம், உடல் மொழி அனைத்துமே மாணவன் வேடத்துக்கு கச்சிதமாகப் பொருந்துகிறது. அவரும் முடிந்தவரை இயல்பாக நடிக்க முயற்சித்திருக்கிறார்.

      ஜிவி பிரகாஷுக்கு இணையான வேடம் ஸ்ரீதிவ்யாவுக்கு. அவருக்கும் மாணவி வேடம் நன்றாகப் பொருந்துகிறது. இன்னும் கொஞ்சம் இயல்பாக நடித்திருக்கலாம்.

      ஜிவி பிரகாஷுடன் வரும் மிர்ச்சி ஷா காட்சிகள் கிச்சு கிச்சு மூட்டுகின்றன. இன்னும் கூட அவரைப் பயன்படுத்தியிருக்கலாம்.

      பள்ளிகளில் நடப்பத்தான் காட்டுகிறோம் என்ற பெயரில், மாணவர்களுக்கு தெரியாத கெட்ட சமாச்சாரங்களையும் கூட கற்றுத் தருவது போலிருக்கின்றன சில காட்சிகள்.

      தனியார் பள்ளி, அங்கு நடக்கும் தில்லுமுல்லுகள்... இவற்றை வைத்துக் கொண்டு எவ்வளவோ சுவாரஸ்யமான கதைகளைப் பண்ணியிருக்கலாம். திரைக்கதையை இன்னும் கச்சிதமாக்கி, காட்சிகளை விவரமாக, நம்பும்படியாக சொல்லத் தவறியிருக்கிறார் இயக்குநர்.