விமர்சகர்கள் கருத்து

    • ஒரு சயின்ஸ் பிக்ஷன் படத்தில் குறைந்தபட்ச டீடெயிலிங்காவது வேண்டும். ஆனால் அது எதுவும் இந்த படத்தில் இல்லை. எனினும் படம் போரடிக்காமல் நகர்கிறது. 20 வயது பியூட்டியாக மாறி பாட்டி செய்யும் அலப்பறைகள் 'அடடேய்' என காமெடிக்கு கேரண்டி கொடுக்கிறது. அதேபோல், மெசேஜ் சொல்கிறேன் பேர்வழி என எதையும் திணிக்காமல் இருந்ததற்காக இயக்குனருக்கு ஒரு சபாஷ்.

      இதய ராணி ஷில்பாவுக்கு மூன்றாவது படமே ஹீரோயின் சப்ஜெட். அதுவும் டபுள் ஆக்ஷன். அதை சரியாக உணர்ந்து அட்டகாசமாக நடித்திருக்கிறார். நார்மல் பேத்தி, பாட்டி இன்சைடு பேத்தி என இரண்டு கதாபாத்திரங்களையும் அழகாக கையாண்டிருக்கிறார். வாழ்த்துக்கள் ஷில்பா.

      'நீ என்ன மாயம் செய்தாய்', 'மித்ரா' ஆகிய படங்களில் நடித்த விவேக் தான் படத்தின் கதாநாயகன். தனது ரோலை சரியாக செய்திருக்கிறார். அடுத்தடுத்த படங்களில் இன்னும் சிறப்பாக நடிப்பார் என எதிர்பார்க்கலாம்.