twitter
    Tamil»Movies»Petta»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • பழைய பகையை தீர்த்துக் கட்ட நாயகன் நிகழ்காலத்தில் எடுக்கும் முயற்சிகள் தான் கதையின் களம். ஏற்கனவே தமிழ் சினிமாவிற்கு ரொம்பவே பழக்கப்பட்ட கதைதான் என்றாலும், ரஜினி இதில் நடித்திருக்கும் போது ரசிக்க வைக்கிறது.

      முதல் பாதி முழுவதும் கொஞ்சம் முதுமை தெரிகிறது ரஜினி முகத்தில். ஆனால், அது காரணமாகத் தான் உருவாக்கப்பட்டிருக்கிறது என்பது இடைவேளையின் போது பிளாஷ்பேக் ஆரம்பமாகும்போது புரிகிறது. கபாலி மற்றும் காலாவில் ரஜினியை வயதான தோற்றத்தில் பார்த்து கவலைப்பட்ட ரசிகர்களுக்கு விருந்தாக, கலர்புல் காஸ்ட்யூமில் ரஜினி கலக்கியிருக்கிறார்.

      மொத்தத்தில் ரஜினி படமாகவே வெளிவந்திருக்கிறது பேட்ட. பழைய ரஜினியைப் பார்க்க வேண்டும் என ஆவலாகக் காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு ஸ்டைலிஷான ரஜினியைக் காட்டி, எக்ஸ்ட்ரா புத்துணர்ச்சி அடைய வைத்திருக்கிறார்கள். ரஜினி ரசிகர்களை நிச்சயம் திருப்தி படுத்தும் இந்த 'பேட்ட' என்பதில் சந்தேகமே இல்லை.