twitter
    Tamil»Movies»Petta»Story

    பேட்ட கதை

    பேட்ட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹ, திரிஷா, சிம்ரன், சசிகுமார் மற்றும் பலர் நடித்துள்ள அதிரடி திரைப்படம். மேலும் இப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 
     
    கதையின் முன்னோட்டம் : 
     
    கல்லூரி விடுதியில் நிர்வாகியாகப் பணியாற்றிக்கொண்டு இருக்கிறார் காளி (ரஜினி) அதே கல்லூரியில் படிக்கும் மாணவன்தான்  பாபி சிம்ஹா, இவர்கற்குள் நடந்த மோதலால் காளியின் கடந்தகால வாழ்க்கை பாபி சிம்ஹாவிற்கு தெரிய வருகிறது.
     
    காளி தன் எதிரிகளைத் தேடி கல்லுரியில் நிர்வாகியாகப் பணியாற்றிக்கொண்டு, எதிரிகளைப் பழிவாங்கும் படலம் பேட்ட படத்தின் கதை. இப்படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

    கதை :

    ஊட்டி கல்லூரி ஒன்றில் படித்துக் கொண்டும், கல்லூரியே தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டும் அராஜகம் செய்கிறார் பாபி சிம்ஹா. அதே கல்லூரியில் தான் சனத் ரெட்டியும், மேகா ஆகாஷும் படிக்கிறார்கள். இந்த நிலையில், அந்த கல்லூரிக்கு வார்டனாக வரும் ரஜினிகாந்த், பாபி சிம்ஹாவின் கொட்டத்தை அடக்கி, கல்லூரியில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறார். 

    பிறகு,  பேட்ட ரஜினியின் ஆட்டம் ஆரம்பமாக, ரஜினி மீது கோபமாக இருக்கும் பாபி, சந்தர்ப்பம் வரும் போது ரஜினியை பழிவாங்க நினைக்கிறார். இதற்கிடையே நவாசுதீன் சித்திக்கின் ஆட்கள் சனத் ரெட்டியை கொல்ல முயற்சிக்கிறார்கள். 

    பின்பு, தனது பேட்டயை விட்டுவிட்டு, வார்டனாக வரும் ரஜினி, சனத் ரெட்டியை காப்பாற்றினாரா? ரஜினி ஏன் பேட்டையை விட்டுவிட்டு கல்லூரி வார்டனாக வந்தார்? அவரது முன்கதை என்ன? நவாசுதீன் கொல்ல நினைக்கும் சனத் ரெட்டி யார்? நவாசுதீன் ஏன் சனத்தை கொல்ல நினைக்கிறார்? அதன் பின்னணி காரணம் என்ன? க்ளைமாக்ஸில் என்ன நடந்தது? என்பதே பேட்ட படத்தின் மீதிக்கதை.
    **Note:Hey! Would you like to share the story of the movie பேட்ட with us? Please send it to us ([email protected]).