twitter
    Tamil»Movies»Pichaikaran»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • தலைப்பில் சென்டிமென்ட் பார்க்கும் கோடம்பாக்கத்தில் முதல் முறையாக அதை உடைத்து, புதிய ட்ரெண்டை உருவாக்கியிருக்கிறார் விஜய் ஆன்டனி. தலைப்பில் உள்ள இந்த புதுமை படத்தில் தொடர்கிறதா... பார்க்கலாம்.

      கதை...? சொல்ல எளிமையானது. ஆனால் எடுக்க ரொம்பவே சவாலானது. அந்த சவாலை சரியாகவே சமாளித்திருக்கிறார் இயக்குநர் சசியும் அவரது ஹீரோ விஜய் ஆன்டனியும்.

      மேலோட்டமாகப் பார்த்தால் லக்கிமேன் டைப் கதைதான். ஆனால் இந்தக் கதைக்கு இயக்குநர் சசி கொடுத்திருக்கும் ட்ரீட்மென்ட் பாக்யராஜின் புத்திசாலித்தனத்துக்கு இணையானது

      சிரிப்புக்கு உத்தரவாதம் தருகிறார்கள். ஆரம்ப காட்சிகளில் ரொம்பவே ஆமை வேகம். விஜய் ஆன்டனியின் உபதேசங்கள், சாமியார் சொல்லும் பரிகாரக் காட்சிகள் எல்லாம் படத்தை வஞ்சிக் கோட்டை வாலிபன் காலத்துக்கு கொண்டுபோவது போன்ற பிரமை.

      படத்தின் முக்கிய ப்ளஸ் சசியின் வசனங்கள். 'ஏந்தற கைக்கு, ஓங்கற பழக்கம் வராது' ஒரு பருக்கைப் பதம்.

      பெயரில்தான் பிச்சைக்காரன். தரத்தில் கோடீஸ்வரனாக இல்லாவிட்டாலும் லட்சாதிபதியாக நிறைக்கிறான்!