twitter
    Tamil»Movies»Poojai»Story

    பூஜை கதை

    பூஜை 2014ஆம் ஆண்டு, அக்டோபர் 22-ம் நாள்  வெளிவந்த தமிழ் திரைப்படம். இத்திரைப்படம் தமிழ்  மொழியில் வெளியான மசாலா திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை ஹரி இயக்கியுள்ளார். கதாநாயகனாக விஷால், கதாநாயகியாக சுருதி ஹாசன் மற்றும், சத்தியராஜ், ராதிகா சரத்குமார், முகேஷ் திவாரி போன்றோர்கள் நடித்துள்ளனர், பூஜா என்ற பெயரில் இப்படம் தெலுங்கில் வெளியானது.

    கதை

    வாசு சந்தையில் வட்டிக்கு பணம் விட்டு சம்பாதிக்கிறார். சந்தையில் உள்ள அவரது வீட்டிலேயே தங்கியிருக்கிறார். ஒருவருக்காக நியாயம் கேட்க போய் திவ்யாவின் பதிலை கேட்டு அவர் மேல் காதல் கொள்கிறார். வாசு வட்டிக்கு பணம் தருவது திவ்யாவுக்கு தெரிகிறது.தன்னுடைய தோழிக்காக  வாசுவிடம் பணத்தை கடன் கேட்கிறார். அப்பணத்தை கொண்டு திவ்யாவின் தோழி கோயம்பத்தூரில் உள்ள  லீ மெரிடியன் ஓட்டலில் தன் தோழிகளுக்கு விருந்து கொடுக்கிறார். அங்கு வாசு தன் காதலை திவ்யாவிடம் சொன்னதும் அதை ஏற்க மறுத்து தன்னிடம் காதலை சொல்ல சந்தையில் வட்டிக்கு பணம் கொடுக்கும் உனக்கு என்ன தகுதி இருக்கிறது என்று கேட்கிறார். அண்ண தாண்டவம், அன்னம் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தினாலும் அவரின் முதன்மை தொழில் கூலிக்கு ஆட்களை அனுப்பி கொலை செய்வதுதான். 

    நிதி நிறுவனம் அவரின் கூலிக்கு கொலை செய்யும் தொழிலை காட்டாமல் இருப்பதற்கான ஏற்பாடு செய்துள்ளார். இருப்பினும், அவரை பிடிக்க சிவக்கொழுந்து முயல்வது தெரியவருகிறது. எனவே அவரை கொல்ல திட்டமிடுகிறார். ஊரில் உள்ள சிலர் கோவில் தருமகர்த்தா பதவியை கொண்டு அண்ண தாண்டவம் கோவில் வருமானத்தை கொள்ளையடிப்பதாக கூறுகின்றனர். அதை தடுக்க தருமகர்த்தா பதவியை வாசுவின் சித்தப்பா ஏற்கவேண்டும் என்கின்றனர். வாசுவின் அம்மாவும் பதவி ஏற்கும் படி கூறுகின்றனர். மேலும், தங்கள் பெயரில் உள்ள நிலத்தை தங்கள் தந்தை விருப்பப்படி கோவிலுக்கு எழுதி தருவதாக கூறுகின்றனர்.

     வாசுவிடம் காதலை சொல்ல திவ்யா செல்கிறார். அங்கு வாசு பெரிய பணக்கார வீட்டுப்பையன் என்பது திவ்யாவுக்கு தெரியவருகிறது. அதனால் தன் காதலை சொல்ல முடியாமல் திரும்புகிறார். திவ்யா தன்னை காதலிப்பதை அறிந்த வாசு திவ்யாவிடம் செல்கிறார் திவ்யா தன் காதலை சொல்கிறார். திவ்யாவுடன் திரைப்படம் பார்க்க திரையரங்கம் செல்கிறார் வாசு. சிறிது நேரத்தில் அங்கு வருவதாக திவ்யா கூறுகிறார். சிவக்கொழுந்தை சிலர் கொல்ல இருப்பதை அறிந்து வாசுவிடம் அதை கூறுகிறார், திவ்யா. வாசு சிவக்கொழுந்தை காப்பாற்றுகிறார். ஆனால் யாருக்கும் சிவக்கொழுந்தை யார் காப்பாற்றினார்கள் என்று தெரியவில்லை. 

    அண்ண தாண்டவம் வாசுவின் சித்தப்பாவை கோவிலில் அசிங்கப்படுத்துகிறார். அதனால் அவர் தருமகர்த்தா பதவியை ஏற்காமலே திரும்பிவிடுகிறார். வாசு செய்யாத குற்றத்துக்காக அவரை வீட்டுக்குள் வரக்கூடாது என்று கட்டளையிட்ட அவரின் தாய் உண்மை தெரிந்து வாசுவை அழைத்து சித்தப்பாவை அசிங்கப்படுத்தினவனின் கையை உடைக்க கூறுகிறார். அண்ண தாண்டவம் சிவக்கொழந்தை காப்பாற்றியது வாசு தான் என்று அறிகிறார். அண்ண தாண்டவத்தை வாசு சாலையில் அடிப்பதை நிகழ்படமாக திவ்யா தன் ஐபோனில் எடுத்து தோழிக்கு அனுப்பிகிறார். அவர் அதை யூடூயூபில் பதிவேற்றம் செய்து விடுகிறார் அதை பல ஆயிரம் பேர் பார்த்துவிடுகிறார்கள். 
    வாசுவின் குடும்பத்தை கோவிலில் கொல்லவும் வாசுவின் சித்தப்பாவை அவர்களது துணி ஆலையில் கொல்லவும் திட்டமிடுகிறார் அண்ண தாண்டவம். வாசு அவரது சித்தப்பாவை காப்பாற்றினாலும் தன் அம்மாவை காப்பாற்ற முடியாமல் போகிறது. அண்ண தாண்டவம் வெளிமாநிலத்திற்கு தப்பிச்செல்கிறார். வாசு அவரை தேடிச்சென்று அவரைக்கொன்றா இல்லையா என்பதை இயக்குநர் விறுவிறுப்பாக கூறியுள்ளார்.
    **Note:Hey! Would you like to share the story of the movie பூஜை with us? Please send it to us ([email protected]).