twitter
    Tamil»Movies»Pudhupettai
    புதுப்பேட்டை

    புதுப்பேட்டை

    A | 2 hrs 59 mins | Action
    Release Date : 26 May 2006
    Critics Rating
    4.5/5
    Audience Review
    புதுப்பேட்டை இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் 2006-ம் ஆண்டில் மிகவும் அழுத்தமான விமர்சனங்கள் பெற்றுள்ள அதிரடி மற்றும் கேங்க்ஸ்டர் திரைப்படம். புதுப்பேட்டை திரைப்படமானது இன்றும் தமிழ் ரசிகர்களின் கவனத்தில் ஒரு அதிரடி மற்றும் அழுத்தமான திரைக்கதை உள்ள படங்களுக்கு எடுத்துக்காட்டாக உள்ள திரைப்படமாகும். இப்படமானது 2006ல் ரசிகர்களை பெரிய அளவில் மனம் கவராமல் தோல்வி அடைந்த திரைப்படம். இப்படத்தின் கருத்துகள் மற்றும் திரைக்கதையின் அழுத்தத்தினை பின்னர் தமிழ் திரைப்பட ரசிகர்கள் கொண்டாடியுள்ளனர்.

    புதுப்பேட்டை திரைப்படத்தில் நடிகர் தனுஷ் நாயகனை நடிக்க, சீனேகா, சோனியா...
    • செல்வராகவன்
      செல்வராகவன்
      Director/Story/Screenplay
    • யுவன் ஷங்கர் ராஜா
      யுவன் ஷங்கர் ராஜா
      Music Director/Singer
    • நா முத்துக்குமார்
      நா முத்துக்குமார்
      Lyricst
    • கமல் ஹாசன்
      கமல் ஹாசன்
      Singer
    • தனுஷ்
      Singer
    • Darbar Trailer | Rajinikanth | Basha Rerelease | kathi - Tea vadai peachi
    • பிலிமிபீட்
      0/5
      குமார் (தனுஷ்) ஒரு பள்ளி மாணவனாக படத்தில் அறிமுகமாகிறார். பின்னர் ஒரு சிறு தகராளில் தனது தந்தை தாயினை கொல்வதை கண்டு அதிர்ச்சியடையும் தனுஷ் தனது தந்தையிடம் இருந்து தப்பித்து, சென்னையில் ஒரு அனாதையாக பிச்சை எடுத்து வாழ்கிறார். எதிர்பாராமல் இவரையும் காவலர்கள் தவறாக கஞ்சா விற்றவர்களுடன் இணைத்து பிடித்து சிறையில் அடைக்கிறார்கள். பின்னர் அவர்களுடன் நட்பு கொண்டு தனது வாழ்கையை அதிரடியாக வாழ துவங்குகிறார்.

      அரசியல் கட்சியின் பின்னணியில் வேலை செய்யும் இவரது குழு ஒரு நாள் எதிர்க்கட்சியின் இடத்திற்கு சென்று போஸ்டர் ஒட்டுகிறது, அதில் எதிர்பாராமல் தனுஷ் எதிரிகளிடம் சிக்குகிறார். அங்கு நடந்த சண்டையில் முக்கிய வில்லனின் தம்பியை கொன்று தனுஷ் அங்கு இருந்து தப்பிக்கிறார். அதற்கடுத்து தனுஷை கொல்ல அந்த எதிர் குழு பல வகைகளில் முயற்சி செய்து வருகிறது. அவர்களிடம் இருந்து தப்பித்து தனுஷ் ஒரு கேங்க்ஸ்டராக மாறி ஒரு அரசியல் கட்சியின் பின்னணியில் இருந்து எதிரிகளை அழிப்பதே இப்படத்தின் கதை...