twitter
    Tamil»Movies»Pudhupettai»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • குமார் (தனுஷ்) ஒரு பள்ளி மாணவனாக படத்தில் அறிமுகமாகிறார். பின்னர் ஒரு சிறு தகராளில் தனது தந்தை தாயினை கொல்வதை கண்டு அதிர்ச்சியடையும் தனுஷ் தனது தந்தையிடம் இருந்து தப்பித்து, சென்னையில் ஒரு அனாதையாக பிச்சை எடுத்து வாழ்கிறார். எதிர்பாராமல் இவரையும் காவலர்கள் தவறாக கஞ்சா விற்றவர்களுடன் இணைத்து பிடித்து சிறையில் அடைக்கிறார்கள். பின்னர் அவர்களுடன் நட்பு கொண்டு தனது வாழ்கையை அதிரடியாக வாழ துவங்குகிறார்.

      அரசியல் கட்சியின் பின்னணியில் வேலை செய்யும் இவரது குழு ஒரு நாள் எதிர்க்கட்சியின் இடத்திற்கு சென்று போஸ்டர் ஒட்டுகிறது, அதில் எதிர்பாராமல் தனுஷ் எதிரிகளிடம் சிக்குகிறார். அங்கு நடந்த சண்டையில் முக்கிய வில்லனின் தம்பியை கொன்று தனுஷ் அங்கு இருந்து தப்பிக்கிறார். அதற்கடுத்து தனுஷை கொல்ல அந்த எதிர் குழு பல வகைகளில் முயற்சி செய்து வருகிறது. அவர்களிடம் இருந்து தப்பித்து தனுஷ் ஒரு கேங்க்ஸ்டராக மாறி ஒரு அரசியல் கட்சியின் பின்னணியில் இருந்து எதிரிகளை அழிப்பதே இப்படத்தின் கதை.