twitter
    Tamil»Movies»Pyaar Prema Kaadhal»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • வழக்கமான காதல் கதை தான். ஆனால் அதை இளமை ததும்ப, புதுசாக கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் இளன். படத்தில் வரும் ஒவ்வொரு பாத்திரப்படைப்பும் கச்சிதம். யாரையும் வில்லனாகவோ, வில்லியாகவோ காட்டாமல், அனைவரையுமே எதார்த்தமாக காட்சிபடுத்தி இருப்பது படத்தின் மிகப்பெரிய ப்ளஸ்.

      பிக் பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாணும், ரைசா வில்சனும் அந்த வீட்டில் லிமிட்டாக செய்ததை, இங்கு அன்லிமிட்டடாக செய்திருக்கிறார்கள். ஒரு மிடிஸ் கிளாஸ் பையனை அப்படியே நம்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார் ஹரிஷ் கல்யாண். காதல், குறும்பு, அம்மாவிடம் பாசம் என கிடைத்த கேப்பில் எல்லாம் ஸ்கோர் செய்கிறார். போட்டி போட்டு ஓவர் டேக் செய்கிறார் ரைசா. இருவரும் பிக் பாஸ் மூலம் கிடைத்த மைலேஜை, சரியாக பயன்படுத்தி கொண்டிருக்கிறார்கள்.

      ஹரிஷின் அம்மாவாக ரேகா, ரைசாவின் அப்பாவாக ஆனந்த் பாபு. இருவரும் இரு துருவங்கள். ஒரு சாதாரண தாயாக தன் மகனுக்கு திருமணம் செய்து வைக்க ஏங்கி தவிக்கிறார் ரேகா. ஆனால் தன் மகளின் லிவிங் டுகெதர் வாழ்க்கைக்கு அனுமதி தந்து ஆனந்தப்படுகிறார் ஆனந்த்பாபு. மகளின் தடுமாற்றத்தை உணர்ந்து, அதை சரி செய்யும் இடம் அருமை

      எல்லாம் சரிதான். ஆனால் அந்த லிவிங் டுகெதர் தான் நெருடல். கல்யாணத்துக்கு முன்பு செக்ஸ் என்பதை இன்னும் அட்வான்சாக காதலுக்கு முன்பே செக்ஸ் என சிந்தித்திருக்கிறார் இயக்குனர் இளம். இதெல்லாம் நம் கலாச்சார காலவர்களுக்கு கோபத்தை உண்டு செய்யாதா புரோ. அதுவும் ஒரு பெண் என்ன இவ்வளவு கேசுவலாகவா எல்லாவற்றையும் எடுத்துக்க முடியும். முன்பாதி, பின்பாதி எல்லாம் ஓ.கே., ஆனால் அந்த க்ளைமாக்ஸ் தான் செம சொதப்பல். எப்படி முடிப்பது என முடிவு செய்ய முடியாமல் திணறுகிறது திரைக்கதை.