twitter
    Tamil»Movies»Raatchasi»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • நடிப்பு ராட்சசி ஜோதிகாவுக்கு கீதா ராணி மகுடம் சூட்டி அழகு பார்த்திருக்கிறார் இயக்குனர் கவுதம்ராஜ். ஜோவிடம் இருந்து தனக்கு தேவையானதை மட்டும் கேட்டுவாங்கி படத்தில் வைத்திருக்கிறார். எனவே, இதில் நாம் வித்தியாசமான ஜோவை பார்க்க முடிகிறது.

      "டீச்சர்ஸ் கொஞ்சம் அதிகமா வேலை செஞ்சா போலீசுக்கு வேலை குறைஞ்சிடும்", "நீங்க எடுக்குற மார்க்கை வெச்சு இந்த உலகம் உங்களுக்கு மார்க் போட தயாராகிடுச்சு ", தீமை நடப்பதை வேடிக்கை பார்ப்பவர்களும் அதன் பகுதியாகிறார்கள். எதிர்த்து நிற்பவர்களே வரலாறாகிறார்கள்", உள்பட நிறைய சாட்டையடி வசனங்கள் படம் முழுவதும் நிரம்பிக்கிடக்கின்றன. கவுதம்ராஜும், பாரதிதம்பியும் இந்த சமூகத்தின் மீது வைத்திருக்கும் அக்கறை வசனங்களில் வெளிப்பட்டுள்ளது.

      அரசு பள்ளிகளின் இன்றைய நிலையை அப்படியே காட்டுகிறது படம். ஆனால் முதல் பாதி படம் முழுக்க அட்வைஸ் மழை பொழிந்திருக்கிறார்கள். பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு ஒரு ஸ்கூல் எச்எம் ஆர்டர் போடுவது போன்ற சினிமாத்தனமான காட்சிகள் படத்துடன் நம்மை ஒன்றவிடாமல் தடுக்கிறது. இரண்டாம் பாதியில், தனது உணர்வுப்பூர்வமான நடிப்பால் ரசிகர்கள் கட்டிப்போடுகிறார் ஜோதிகா. இருந்தாலும், இதே பின்னணியில் ஏற்கனவே வந்த படங்களை ராட்சசி ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கிறாள்.