twitter
    Tamil»Movies»Raja Ranguski»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • ஒரு த்ரில்லர் திரைப்படத்துக்கு தேவையான திரைக்கதையை பக்காவாக அமைத்திருக்கிறார் இயக்குனர் தரணிதரன். யார் கொலையாளி என்பதை பார்வையாளர்கள் யூகித்துவிடக்கூடாது என்பதற்காக பல டிவிஸ்ட்டுகளை வைத்திருக்கிறார். கதைக்கு தேவையான விஷயங்களை மட்டுமே படத்தில் வைத்திருப்பதற்காக இயக்குனருக்கு பாராட்டுக்கள்.

      முதல் பாதி செம ஷார்ப்பாக இருக்கின்றது. இரண்டாம் பாதியில் வரும் பாடல்கள் படத்தின் வேகத்தை குறைத்து விடுகின்றன. அதேபோல தீவிர சினிமா ரசிகர்கள் இவர் தான் கொலையாளி என்பதை யூகித்துவிடுவார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை. போலீஸ் தொடர்பான காட்சிகளில் இன்னும் கூட டீடெயிலிங் செய்திருக்கலாம்.

      பழங்காலத்து கத்தி, உலகின் முதல் பைபிள் அதற்கான சந்தை மதிப்பு என பல புரியாத விசயங்களை பற்றி படம் பேசுகிறது. ஆனால், அதை பாமர மக்களுக்கு புரியும் வகையில் எளிமைப் படுத்தியிருப்பதும் சிறப்பு.

      படத்தின் மிகப்பெரிய பலம் யுவனின் இசை. 'பட்டுக்குட்டி நீதான்' பாடல் பார்வையாளர்களை படத்துக்குள் கைப்பிடித்து இழுத்து சென்றுவிடுகிறது. சாதாரண காட்சியை கூட வேற லெவலுக்கு எடுத்து செல்கிறது பின்னணி இசை.

      படம் கொஞ்சம் மெதுவாக நகர்வதால் இரண்டாம் பாதி சிறிது அயர்வை ஏற்படுத்திவிடுகிறது. காமெடிக்கு இன்னும் கூட முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம். அதேபோல கொலைக்கான காரணம் ஏற்றுக்கொள்ளும் படியாக இருந்தாலும் லேசாக உறுத்துகிறது.