ராஜ வம்சம் கதை

    ராஜ வம்சம் இயக்குனர் கதிர்வேலு இயக்கத்தில் நடிகர் சசிகுமார், நிக்கி கல்ராணி நடிக்கும் நகைச்சுவை மற்றும் குடும்பத்திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் டி.டி.ராஜா தனது தயாரிப்பு நிருவமான செந்தூர் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்க, இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இசையமைக்கிறார். மேலும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் சித்தார்த் ஒளிப்பதிவு செய்கிறார்.

    இப்படத்தின் இயக்குனர் இத்திரைப்படத்தினை பற்றி "இது குடும்பப்படமாகவும், தற்போது நாட்டிற்கு தேவையான ஒரு கருத்தும் இப்படத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது" என்று கூறியுள்ளார், மேலும் இப்படத்தில் ராதா ரவி, விஜய குமார், சதீஷ், தம்பி ராமைய்யா, மனோபாலா, ரமேஷ் கன்னா என பலர் நடித்துள்ளனர்.

    இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சென்னை, பொள்ளாச்சி, பேங்காக் ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது, என்றுள்ளார் படக்குழுவினர்.
    **Note:Hey! Would you like to share the story of the movie ராஜ வம்சம் with us? Please send it to us (popcorn@oneindia.co.in).