TamilbredcrumbMoviesbredcrumbSaamy 2bredcrumbCritics Review

  விமர்சகர்கள் கருத்து

  • ஆக்ஷன், ரொமான்ஸ் என வழக்கமான ஹரியின் படம் தான் சாமி 2. ஹரி படத்தின் டெம்பிளேட்களான சுமோ, ஹெலிகாப்டர், கார் சேஸிங், ஒரு குத்துப்பாட்டு, ஆங்காங்கே காமெடி, கொஞ்சம் சென்டிமெண்ட், அதிரடி வசனங்கள், ஹீரோவும், வில்லனும் மாற்றி மாற்றி சவுண்டு விடுவது என எல்லாமே தவறாமல் இந்தப் படத்திலும் இருக்கிறது.

   முக்கியமாக ஹரி படத்தில் எதிர்பார்க்கவே கூடாத ஒன்று லாஜிக். சாமி 2வும் அதற்கு விதிவிலக்கல்ல. அதனால் ஒரு அசிஸ்டெண்ட் கமிஷ்னர் எப்படி கலெக்டரைக் கேள்வி கேட்பார், தமிழக போலீஸ் அதிகாரி எப்படி எல்லா மாநிலங்களுக்கும் சட்சட்டென போகிறார் என்பது போன்ற கேள்விகளை நாம் தப்பித்தவறிக்கூட கேட்கக் கூடாது. அதிலும் டிரான்ஸ்பர் விசயத்தை எல்லாம் ஜனாதிபதி கவனிக்கிறார் என்பது டூ டூ டூ மச்.

   அப்பா, மகன் என இரண்டு வேடங்களிலும் கெத்து காட்டி இருக்கிறார் விக்ரம். 15 வருடங்களுக்குப் பிறகு வரும் இரண்டாம் பாகம் என்றாலும், முதல் பாகத்தில் பார்த்த அதே லுக்கை, போலீஸ் எனும் செருக்கை ஆறுச்சாமிக்கு கொண்டு வந்திருப்பது சபாஷ். லேசான தாடி, இறுக்கமான முகம், பார்மல் டிரஸ் என மகன் ராம்சாமியாக குட் லுக் தருகிறார். ஆனாலும், முகம் அப்பாவைக் காட்டிக் கொடுக்கிறது. அதாவது வயது முதிர்ச்சி முகத்தில் தெரிகிறது.

   படம் ஜெட் வேகத்தில் நகர்கிறது. ஹரி படத்திற்கே உரித்தான பரபர, விறுவிறு காட்சிகள் ரசிகர்களை இருக்கையிலேயே அமர வைக்கிறது. ஆனால், காமெடி என்ற பெயரில் சூரி செய்யும் சேட்டைகள் தான் ஆங்காங்கே நெளிய வைக்கின்றன. முதலில் காமெடி பண்ணுங்க சூரி, அப்புறம் மெசேஜ் சொல்லலாம்.

   அடுத்தது தேவி ஸ்ரீபிரசாத். மொளகாப் பொடியே, டர்ணக்கா பாடல்கள் ஆட்டம் போட வைக்கின்றன. அதிரூபனே பாடல் செம லவ்மூடைக் கொடுக்கிறது. விக்ரமும், கீர்த்திசுரேஷும் இணைந்து பாடிய மெட்ரோ ரயில் பாடல் சூப்பர் ரொமாண்டிக் நம்பர். பாடல்களில் செலுத்திய கவனத்தை பின்னணியில் காட்டத் தவறி இருக்கிறார் டிஎஸ்பி. காதைக் கிழிக்கிறது பின்னணி. பாபி சிம்ஹாவுக்கு தரப்படும் பீஜிஎம் இதில் விதிவிலக்கு.

   என்னதான் விக்ரம் பஞ்ச் பேசி, சண்டை போட்டாலும், முதல் பாகத்தில் இருந்த ஜீவன் சாமி 2வில் மிஸ்ஸாகிறது. காட்சிகள் டக்டக்கென நகர்வதால் மனதில் எதுவும் ஒட்டவில்லை. முதல் பாகத்தில் நேர்மையான மனிதராக காட்டப்பட்ட டெல்லிகணேசின் கேரக்டர், இதில் புரோகிதராக மாற்றப்பட்டிருப்பது நெருடலாக இருக்கிறது.

   முதல் பாகத்தில் மிகவும் ஃபேமஸான 'நான் போலீஸ் இல்ல பொறுக்கி' டயலாக்கை டிங்கரிங் பண்ணி, இதில் 'நான் சாமி இல்ல பூதம்' என்றாக்கியது போல், பீர் இட்லியை மோர் இட்லி ஆக்கியிருக்கிறார்கள். 'திருநெல்வேலி அல்வா' போல் நச் பாடல் எதுவும் இல்லாதது படத்தின் மிகப்பெரிய மைனஸ்.
  • The second trailer of Hari directorial Vikram's Saamy 2 is released
  • Saamy 2 official Trailer
  Go to : Saamy 2 Videos