twitter

    விமர்சகர்கள் கருத்து

    • ஆக்‌ஷன் ஹீரோவான சந்தானம் ஆனா ஊனானா சண்டை போடக் கிளம்பிடுறார். சந்தானம் அடிச்சு தெறிக்க விடுறதுல அடியாட்கள் தலைகீழா விழுந்து தண்டால் எடுக்குறாங்க. கனல் கண்ணன் மாஸ்டர் சந்தானத்தை வச்சு செம காட்டு காட்டிருக்கார்.

      காமெடியும் நானே ஆக்‌ஷனும் நானேன்னு ஆல்ரவுண்டர் வேலை பார்க்காம, விவேக், ரோபோ சங்கர், பவர் ஸ்டார் சீனிவாசன், மயில்சாமி, லொல்லுசபா சுவாமிநாதன்னு சிலபல காமெடியன்களும் படத்தில் இருக்காங்க. சில இடங்களில் சலிச்சுப்போன மொக்கையைப் போட்டாலும் சில காட்சிகளில் சிரிக்க வைக்கிறார் விவேக்.

      சந்தானத்தின் சில வசனங்கள் செமையாகவும், சந்தானம் ஃபேன்ஸ் சமூகம் கொண்டாடும் அளவுக்கும் இருக்கிறது. விடிவி கணேஷ், விவேக் ஆகியோரும் டைமிங் காமெடியில் சிரிப்பு மூட்டுகிறார்கள்.

      சந்தானத்துக்காக படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு நிச்சயம் இந்தப் படம் ஒரு காமெடி என்டர்டெயினராக இருக்கும். ஆனால், புதுசா எதுவுமே இல்லாத பழைய கால சுத்தல். சந்தானம் நடிச்சதாலும், சில குபீர் காமெடிகளாலும் மட்டுமே படம் தப்பிக்குது. சிம்பு இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளரா அறிமுகமாகியிருக்கார். "அஞ்சு ரூவா காக்கா பிரியாணி துன்னா காக்கா குரல் வராம உன்னிகிருஷ்ணன் குரலா வரும்?" எனும் டயலாக் தான் அவரது பின்னணி இசை கேட்கும்போது திடீரென நினைவுக்கு வந்து தொலைக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா, அனிருத் தொடங்கி சிம்புவின் அப்பா டி.ராஜேந்தர் அம்மா உஷா டி.ராஜேந்தர் உட்பட பலரை பாட வெச்சுருக்கார் சிம்பு.

      'காதல் தேவதை' பாட்டு மட்டும் கொஞ்சம் சுமார். மற்ற எந்தப் பாடலும் நினைவில் நிற்கவே இல்லை. அறிமுகப்படுத்துன சந்தானத்துக்கு நல்லா செஞ்சு விட்டுட்டீங்க தெய்வமே! படத்தில் தனக்கு வராத ஆக்‌ஷனை எல்லாம் வம்புடியா பெர்ஃபார்ம் பண்ணின சந்தானத்துக்கு அடுத்து, ரொம்ப கஷ்டப்பட்டவர் விடிவி கணேஷ் தான். தனக்கு நல்ல நாள்லயே வரவே வராத பிரபுதேவா டான்ஸ் ஸ்டெப்லாம் கஷ்டப்பட்டு பண்ணிருக்கார். பாவம், படத்தோட புரொடியூசர் அவர்தான்!