twitter
    Tamil»Movies»Sandakozhi 2»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • முதல் பாகத்தின் தொடர்ச்சியாகவே பயணிக்கிறது கதை. அதை உறுத்தலில்லாமல் கச்சிதமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் லிங்குசாமி. தன்னுடைய வழக்கமான விறுவிறு திரைக்கதையால் காட்சிகளை நகர்த்தி அசத்தி இருக்கிறார்.

      13 ஆண்டுகளுக்கு முன் பார்த்த அதே சண்டக்கோழியாக விஷால். எந்த மாற்றமும் இல்லாமல் தனக்கே உரித்தான ஆக்ஷன் ஏரியாவில் பின்னி பெடலெடுத்திருக்கிறார். அதிகம் சவுண்ட் கொடுக்காமல் அண்டர்ப்ளே நடிப்பில் ரசிக்க வைக்கிறார்.

      கம்பீரத்துக்கு மறுபெயர் ராஜ்கிரண். முதல் பாகத்தை போலவே இதிலும் மிரள வைக்கிறார். சாந்தமான முகத்தில் அவர் காட்டும் அதிரடி ரியாக்ஷன்களும், நல்லி எலும்பை நறுக்கென கடிப்பதும் என அதிர வைக்கிறார். என் ராசாவின் மனசிலேல ஆரம்பிச்சு, இப்ப வரைக்கும் இந்த நல்லி எலும்பைக் கடிக்கிறத விட மாட்ரீங்களே சார்

      கிராமத்து தேவதையாக கீர்த்தி சுரேஷ். 'யோவ் போயா போயா' என சொல்லும் கம்பத்து பொண்ணுக்கு ஆயிரம் லைக்ஸ். காட்டன் ஹாப் சாரியில் அழகோ அழகு கீர்த்தி.

      பார்வையிலேயே பயமுறுத்துகிறார் வரலட்சுமி. ஒரு சில காட்சிகளில் காஞ்சனா சரத்குமாரின் சாயல் தெரிகிறது. முதல் சில காட்சிகளில் பயமுறுத்தும் வரு, அடுத்தடுத்த காட்சிகளில் வசனம் மட்டுமே பேசி பயத்தை போக்குகிறார்.

      பில்டப் வசனங்கள் வரும் போதெல்லாம், அவர்களாகவே அதை காலி செய்கிறார்கள். அதைத்தவிர பிருந்தாசாரதி, எஸ்.ராவின் வசனங்கள் பெரிதாக ஈர்க்கவில்லை.

      முதல் பாகத்தில் சண்டக்கோழியாக இருந்த விஷால் இந்த படத்தில் சமாதான புறாவாக மாறியிருக்கிறார்.