twitter
    Tamil»Movies»Sangamitra»Movie Trivia

    சங்கமித்ரா

    (2025)

    ரசிகர்கள் கருத்து

    வெளியீட்டு தேதி

    Dec 2025
    Trivia
    சங்கமித்ரா படம் படப்பிடிப்பு ஆரம்பம் ஆகும் முன்னே பிரமாண்ட பரபரப்பை ஏற்படுத்தி பிரபலமானது. அப்படத்தின் போஸ்டர் வெளியிட்டதை தொடர்ந்து, அதில் ஸ்ருதிஹாசன் முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வந்தன. 

    இருப்பினும் ஸ்ருதிஹாசன் சங்கமித்ராவில் நடிப்பதை தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளானார். பின் திடீரென்று படத்திலிருந்து விலகிவிட்டார். 

    தற்போது அந்த கதாப்பாத்திரத்திற்கு நயன்தாரா தான் ஏற்றவர் என்றும் அவரை இப்படத்தில் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடக்கின்றது என்றும் செய்திகள் வெளிவந்துள்ளது. 

    கதாநாயகிகளுக்கு முக்கியம் கொண்ட படத்தில் மட்டுமே நடித்து வரும் நயன்தாராவின் நடிப்பு தற்போது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதனால்,  சங்கமித்ரா படத்தில் நயன்தாராதான் நடிக்க வேண்டும் என்று பலர் எதிர்பார்க்கின்றனர். 

    சங்கமித்ரா படத்தில் ஜெயம் ரவி மற்றும் ஆர்யா இருவரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.