சங்கிலி புங்கிலி கதவ தொற

ரசிகர்கள் கருத்து

வெளியீட்டு தேதி

19 May 2017
கதை
சங்கிலி புங்கிலி கதவ தொற அறிமுக இயக்குனர் ஐகே ராதா இயக்கத்தில் ஜீவா, ஸ்ரீ திவ்யா, சூரி மற்றும் இளவரசு ஆகியோர் நடித்த நகைச்சுவை காதல் திரைப்படம். இத்திரைப்படத்தினை அட்லியின் ஏ பார் ஆப்பிள் நிறுவனம் தயாரித்துள்ளது.

கதை : 

ஜீவா தனது தாயார் ராதிகாவுடன் தன்னுடைய மாமா வீட்டில் வசித்து வருகின்றனர்.  ராதிகாவுக்கு தமக்கென்று ஒரு சொந்த வீடு இருக்க வேண்டும் என்ற எண்ணம். தன்னுடைய அம்மாவின் ஆசையை நிறைவேற்ற ஜீவா ஊருக்கு வெளியில் உள்ள ஒரு பங்களாவை வாங்க முயற்சிக்கிறார்.

பல போராட்டங்களுக்கு பிறகு அந்த பங்களாவை வாங்கி குடிபுகும் நேரத்தில், தம்பி ராமையா தன் மகள் ஸ்ரீதிவ்யா மற்றும் குடும்பத்தாருடன் அதே பங்களாவிற்கு வந்து அந்த வீட்டை உரிமை கொண்டாகின்றார். 

இவர்களின் சண்டை ஒருபுறம் இருக்க, மறுபுறத்தில், அந்த பங்களாவில் உள்ள ஒரு அமானுஷ்யம் அந்த வீடு தன்னுடையது என்றும், அங்குள்ளவர்களை மிரட்டுகிறது. அதனுடன், சில அமானுஷ்ய நிகழ்வுகளையும் நடத்துகிறது. 

இறுதியில், அந்த வீடு யாருக்கு சொந்தமானது..? அந்த வீட்டில் இருக்கும் அந்த அமானுஷ்யம் என்ன..? என்பதே படத்தின் நகைச்சுவை மற்றும் த்ரில்லர் கலந்த மீதிக்கதை.
Buy Movie Tickets