twitter
    Tamil»Movies»Sarkar»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • விஜயின் அறிமுகக் காட்சிக்கு முன்னரே அவரைப் பற்றிய பில்டப்புகளால் திரையரங்கமே அதிர்கிறது. படம் முழுவதும் செம ஸ்டைலிஷாக வரும் விஜய், ஆக்சன் காட்சிகளில் அதகளப் படுத்தியிருக்கிறார். தனது ரசிகர்களுக்கு தீபாவளி விருந்து படைத்திருக்கிறார். ஏ,பி,சி என அனைத்து சென்டர்களிலும் சர்கார் ராஜ்ஜியம் தான்.

      ஒரு பிரச்சினையைப் பற்றி மட்டும் பேசாமல், நெல்லை கந்துவட்டியால் ஒரு குடும்பமே தீக்குளித்த சம்பவம் என்பது போன்ற, தமிழகத்தில் சமீபத்தில் நடந்த பல பரபரப்பு சம்பவங்களைப் பற்றிப் பேசியிருப்பதால், எளிதாக படத்துடன் ஒன்ற முடிகிறது.

      அரசியல் கனவில் இருக்கும் விஜய்க்கு இது முக்கியமான படம். ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை படம் முழுக்க விஜய்யின் சர்கார் தான். விஜய்யின் அரசியல் எண்ட்ரிக்கு நடைபாதை அமைத்து கொடுக்கும் வகையில் திரைக்கதையை அமைத்திருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.

      அழகு தேவதையாக ஜொலிக்கும் கீர்த்தி சுரேஷுக்கு விஜய்யை ரொமான்ஸ் செய்யும் வாய்ப்பு. இரண்டாவது படத்திலும் அதனை மிகத் திறமையாக செய்திருக்கிறார். வரலட்சுமியின் வில்லத்தனம் செம ஹைப்பாக இருக்கிறது. முதல்வரின் மகள் கோமலவள்ளியாக மிரட்டல் நடிப்பைத் தந்திருக்கிறார். இரண்டாம் பாதியில் இவரும், விஜயும் மோதிக் கொள்ளும் காட்சிகளில் அனல் பறக்கிறது.

      ஐஎம் ஏ கார்ப்பரேட் கிரிமினல், உங்க ஊரு தலைவனை தேடிப்பிடிங்க, இது தான் நம்ம சர்கார் என தெறிக்கவிடும் பன்ச் டயலாக்குகள் ஏராளமாக இருக்கின்றன.

      ராதாரவி, பழ.கருப்பையா எல்லாம் அசல் அரசியல்வாதிகள் என்பதால், அந்தந்த கதாபாத்திரத்திற்கு யதார்த்தமாக பொருந்துகிறார்கள். காமெடிக்கு என முதல் பாதியில் ஒரு சில நிமிடங்களே வந்து போனாலும், விலா எலும்பு நோக சிரிக்க வைக்கிறார் யோகிபாபு. பின்பாதி முழுக்க விஜய்யுடனேயே பயணிக்கும் பாத்திரம் அவருக்கு. அதிலும் மனிதர் பின்னி பெடலெடுக்கிறார்.

      ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் செம. சிம்டாங்காரன் பாடலுக்கு தியேட்டரே எழுந்து ஆடுகிறது. ஒரு விரல் புரட்சி செம வைரல். பின்னணி இசை காட்சிக்கு காட்சி ஹார்ட் பீட்டை எகிற வைக்கிறது. ரஹ்மான் ரஹ்மான் தான்.

      எனது வாக்காள பெருமக்களே என சர்கார்மூலம் தனது அரசியல் என்ட்ரியை அழுத்தமாக அறிவித்திருக்கிறார் விஜய். நிச்சயம் முருகதாஸ் - விஜய் கூட்டணிக்கு இப்படம் ஹாட்ரிக் வெற்றியைத் தரும்.