twitter
    Tamil»Movies»Sarkar»Story

    சர்கார் கதை

    சர்கார் தமிழ் அதிரடி காதல் திரைப்படம். இத்திரைப்படத்தினை இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்க, விஜய், கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க, ஸ்ரீகர் பிரசாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தினை சன் பிக்சர்ஸ் சார்பாக கலாநிதி மாறன் தயாரித்துள்ளார். 

    கதை : 

    அமெரிக்காவில் பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தின் உயரதிகாரியான சுந்தர் (விஜய்), செல்லும் இடமெல்லாம் தன் புத்திசாலித்தனத்தால் கம்பெனிகளை வளைத்துப் போடுகிறார். இதனால் பெரிய பெரிய கார்ப்பரேட் முதலாளிகள் இவரைப் பார்த்து பயந்து ஓடுகின்றனர். இந்நிலையில் இந்தியா வருகிறார் சுந்தர். இங்கே எந்த கம்பெனியை அவர் குறி வைத்துள்ளாரோ என அனைவரும் பீதியில் இருக்க, தனது ஜனநாயகக் கடமையை, அதாங்க ஓட்டுபோடுவதற்காக தமிழகம் வந்திருப்பதாகக் கூறி அதிர வைக்கிறார்.

    ஆனால், பெரு மூளைக்காரனான சுந்தரையே தூக்கி சாப்பிட்டு விடுகிறார்கள் நம்மூர் அரசியல்வாதிகள். ஆம், அவரது ஓட்டை வேறு யாரோ ஒருவர் போட்டுவிட, அதிர்ச்சி ஆகிறார் சுந்தர். தேர்தலை ரத்து செய்யக் கோரி, அதில் வெற்றியும் பெறுகிறார். இதனால் அரசியல்வாதிகளின் எதிர்ப்பிற்கு ஆளாகிறார். இதன் தொடர்ச்சியாக தமிழக அரசியல்வாதிகளுக்கு எதிரான தனது ஆட்டத்தை ஆரம்பிக்கிறார் கார்ப்பரேட் கிரிமினல் சுந்தர். ஓட்டின் மதிப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார். 
    **Note:Hey! Would you like to share the story of the movie சர்கார் with us? Please send it to us ([email protected]).