twitter
    Tamil»Movies»Seema Raja»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • சீமராஜாவாக அசத்தி இருக்கிறார் சிவகார்த்திகேயன். உள்ளூரில் ஊதாரித்தனமாக சுற்றித்திரிவது, சார்ட் வண்டியில் வந்து சைட் அடிப்பது, சமந்தாவை காதலிப்பது, சூரியுடன் சேர்ந்து காமெடி செய்வது என தனது வழக்கமான துறுதுறு நடிப்பால் கவர்கிறார். ஆனால் அதே லுக்குடன் காஸ்ட்டியூமை மட்டும் மாற்றி கடம்பவேல் ராஜாவாக வலம் வர நினைத்திருப்பது ஒர்க்கவுட் ஆகவில்லை.

      சாதாரண எண்டர்டெயினர் படம் என்பதை தாண்டி மாஸ் ஹீரோ எண்டர்டெயினர் படமாக சீமராஜாவை கொடுக்க முயற்சித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். ஓபனிங் பைட், ஓபனிங் சாங், பன்ச் டயலாக்ஸ் என மாஸ் ஹீரோ படத்துக்கு தேவையான அனைத்தும் இடம்பெற்றிருக்கிறது.

      சிவகார்த்திகேயன் எண்ட்ரியைவிட மாஸான எண்ட்ரி காளிஸ்வரி சிம்ரனுக்கு. 'பொம்பளையா இவ' என நம் தாய்மார்களே திட்டும் அளவுக்கு செம பெர்பாமன்ஸ். ஆனால் சவுண்ட் பார்ட்டியாக எண்ட்ரியாகி, பின்னர் சைலண்ட் மோடுக்கு தாவி விடுகிறார்.

      ராணி வேடத்தில் கேமியோ செய்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ். இந்த கெட்டப்பில் பார்க்கும் போது சாவித்திரி ஞாபகம் தான் வருகிறது. கம்பீர ராஜா நெப்போலியன், அடாவடி வில்லன் லால், தொட்டி தாத்தா என படத்தில் வரும் அனைவருமே நிறைவான நடிப்பை தந்திருக்கிறார்கள். அனைவரது காஸ்டியூம்சும் ரசிக்க வைக்கிறது.

      ஒரு மாஸ் கமர்சியல் படத்துக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் நேர்மையாக செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியம். அந்த போர் காட்சிகள் ஸ்பார்டன்ஸ் படத்தை நினைவூட்டுகிறது. அந்தளவுக்கு கிராபிக்ஸ் காட்சிகளும் உயிர்ப்புடன் இருக்கின்றன. கலை, ஸ்டன்ட் என மற்ற தொழில்நுட்ப கலைஞர்களின் கடுமையான உழைப்பும் ஸ்கிரீனில் தெரிகிறது.