twitter
    Tamil»Movies»Seethakathi»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • 75 வயது முதியவர் வேடத்தில் விஜய் சேதுபதி கச்சிதமாக பொருந்துகிறார். நாடகங்களில் நடிக்கும் போது குரல், உடல் மொழி என அனைத்திலுமே அந்த முதுமையை வெளிக்காட்டுகிறார். குறிப்பாக அவுரங்கசிப் நாடகத்தில் எட்டு நிமிடங்கள் ஓடும் சிங்கிள் ஷாட் காட்சியில் தனது நடிப்பாற்றலை முழுமையாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

      சீதக்காதியின் கதை நம்பமுடியாத ஒன்றாக இருப்பதால், படத்துடன் ஒன்ற முடியவில்லை. 'நல்ல கதை அம்சம் உள்ள படங்களை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் இங்குள்ள வியாபாரிகள் தான் அதை ஏற்க மறுக்கிறார்கள்' என்பது தான் படம் சொல்ல நினைக்கும் செய்தி. இதனை நம்பத்தன்மைமிக்க கதையில் சொல்லியிருக்கலாமே பாலாஜி.

      மொத்தத்தில் செத்தும் கொடுத்த சீதக்காதியை, உயிருள்ள ஜீவனாக படைத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.