twitter

    சீதக்காதி கதை

    சீதக்காதி இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, ரம்யா நம்பீசன், ஓவியா மற்றும் பலரும் நடித்த நகைச்சுவை காதல் திரைப்படம். இத்திரைப்படத்திற்கு கோவிந்த் மேனன் இசையமைத்துள்ளார்.

    இயக்குனர் கிட்டத்தட்ட முதல் பட பாணியில் காமெடியுடன்  வழக்கமான கதைகளுள் வித்யாசமான கோணத்தில் அழுத்தமான வசனங்களில் சிந்திக்க வைக்கும் படைப்பாகும். கலைக்கு என்றுமே அழிவில்லை என்பதை அழுத்தமாக கூறியுள்ளார் இயக்குனர் பாலாஜி தரணிதரன்.

    கதை 
    இயக்குனர் பாலாஜி தரணிதரன் தனது முதல் படமான 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' திரைப்படத்திற்கு நேர் முரண் படைப்புதான் 'சீதக்காதி'. செத்தும் கொடுத்தான் சீதக்காதி கதையில் இருந்து தான் 'சீதக்காதி' என்ற பெயரை எடுத்து வைத்துள்ளார் இயக்குனர் பாலாஜி தரணீதரன்.

    ஒரே அரங்கில் தொடர்ந்து 50 வருடங்களாக தினமும் நாடகம் நடத்தி வரும் 73 வயதாகும் 'அய்யா' ஆதிமூலம் (விஜய்சேதுபதி) சிறு வயதில் இருந்தே நாடகம் மீது ஆர்வம் கொண்டு அதிலேயே மொத்த வாழ்க்கையையும் செலவளிக்கிறார். சினிமா வாய்ப்புகள் வந்தும் மறுத்து மக்கள் முன்னிலையில் மட்டுமே நடிப்பேன் என கூறி கலையின் மீது வெறி கொண்டவர் ஆக இருக்கிறார்.

    நாடகத்திற்கு போதிய வரவேற்பு இல்லாததால் வருமானம் குறைவு, தொடர்ந்து நாடகத்தை நடத்த முடியாத நிலை, அதே நேரத்தில் பேரனின் ஆபரேஷனுக்காக தேவைப்படும் ஒரு பெரிய தொகை என பலவித சிக்கல்களில் இருக்கும்போது திரைப்படத்திற்குள் நுழைகிறார் அய்யா, இவரை வைத்து படம் தயாரிக்க வருகிறார் சுனில், திடீரென அய்யா நடிக்க மறுக்கிறார் அதனால் ஆத்திரம் அடையும் சுனில் நீதிமன்றத்தில் மனு அளிக்கிறார் பின்பு என்னவாயிற்று என்பதே மீதி கதை.

    கலைக்கு என்றுமே அழிவில்லை என்பதை அழுத்தமாக கூறியுள்ளார் இயக்குனர் பாலாஜி தரணிதரன்.
    **Note:Hey! Would you like to share the story of the movie சீதக்காதி with us? Please send it to us ([email protected]).