twitter
    Tamil»Movies»Super Deluxe
    சூப்பர் டீலக்ஸ்

    சூப்பர் டீலக்ஸ்

    A | 2 hrs 56 mins | Drama
    Release Date : 29 Mar 2019
    4/5
    Critics Rating
    5/5
    Audience Review
    சூப்பர் டீலக்ஸ் ஆரண்ய காண்டம் புகழ் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில், விஜய் சேதுபதி, பாஹத் பாசில், மிஸ்கின், சமந்தா, ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்த திரைப்படம். இப்படத்திற்கு பி.எஸ்.வினோத் மற்றும் நீரவ் ஷா இருவரும் ஒளிப்பதிவு செய்ய, யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இயக்குனர்களாகிய நலன் குமாரசாமி, நீலன் மற்றும் மிஸ்கின் ஆகியோர் இப்படத்திற்கு வசனம் எழுதியுள்ளார்கள்.  இத்திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி பெண் வேடமிட்டு நடித்துள்ளார். மேலும் விஜய் சேதுபதி நடித்த திரைப்படங்களில் இத்திரைப்படமானது முதன் முதலில் "ஏ" சான்றிதழை...
    • தியாகராஜன் குமாரராஜா
      தியாகராஜன் குமாரராஜா
      Director
    • யுவன் ஷங்கர் ராஜா
      யுவன் ஷங்கர் ராஜா
      Music Director
    • பில்மிபீட்
      4/5
      ஆரண்ய காண்டத்துடன் சூப்பர் டீலக்ஸை நிறைய இடங்களில் தொடர்ப்பு படுத்திக்கொள்ளலாம். அதில் வரும் சப்பை - சுப்பு கதாபாத்திரங்களுடன் சமந்தா - பகத் பாசிலையும், கொடுக்காபுள்ளி - காளையன் கதாபாத்திரங்களுடன் ராசுகுட்டி - ஷில்பா கதாபாத்திரங்களையும் ஒப்பிட்டு பார்த்தால், இரண்டுக்கும் பெரிய வேறுபாடு எதுவும் இருக்காது.

      கிட்டத்தட்ட ஆரண்ய காண்டம் படத்தின் இரண்டாம் பாகம் போலவே இருக்கிறது. ஆனால் அதில் தர்மத்தை பற்றி பேசிய இயக்குனர், இதில் காமத்தை பற்றி பேசியிருக்கிறார். பல்வேறு விஷயங்கள் குறித்து படம் கேள்வி எழுப்புகிறது. அற்புதமும் ஷில்பாவும் சந்திக்கும் அந்த காட்சி, கடவுளின் இருப்பை கேள்விக் கேட்கிறுது. ஆனால் சில காட்சிகள் மிகைப்படுத்தப்படுவதால், சினிமாத்தனம் எட்டிப்பார்க்கிறது.

      முதல் பாதி படத்தில் இருந்த வேகம் இரண்டாம் பாதியில் மிஸ்ஸிங். அதேபோல், தவறை கூட பாசிடிவாக எடுத்துக்கொள்ள சொல்கிறது படம். ஆனா, ஒரு பையன் குண்டா இருந்தா உடனே அவன காமெடி பீஸ் ஆக்கிட்றது என்ன மாதிரியான மனநிலை இயக்குனரே. அதேபோல, ஏலியன் வந்து வாழ்க்கை பாடம் எடுக்குறதெல்லாம் ரொம்ப டூச் ப்ரோ.

      கடைசியில வாழ்க்கையின் ரகசியம் காமத்தில் தான் இருக்கிறது என்று சொல்லிட்டீங்களே பாஸ். தப்பில்ல தப்பில்ல... படத்தில் கதை, லாஜிக் பிரச்சினை எல்லாம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் திரைக்கதையும், மேக்கிங்கும் தான் படத்தை தூக்கி நிறுத்துகின்றன. எப்படி ..