twitter

    விமர்சகர்கள் கருத்து

    • படத்தில் இரண்டு பெரிய இயக்குனர்கள் நடித்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் நடிப்பதுடன் தங்களுடைய கடமையை முடித்துக்கொண்டிருக்கிறார்கள். மிக்‌ஷின் ஓவராக நடித்து நம்மை டார்ச்சர் செய்திருக்கிறார். சுசீந்திரனுக்கு அந்த கதாபாத்திரம் பொருந்தவே இல்லை.

      விக்ராந்த் வழக்கம்போல் சிறப்பாகவே நடித்து இருக்கிறார். மகளிடம் உணர்வுபூர்வமாக சைகை மொழியில் பேசும்போதும், சண்டைக்காட்சிகளிலும் தனது உடல்மொழியால் கவர்கிறார். அதுல்யா, ரித்தீஷ் இருவரும் காமெடி என்ற பெயரில் ஏதேதோ செய்து கடுப்பேற்றுகிறார்கள்.

      படத்தின் ஒரே ஆறுதல் பேபி மானஸ்வி தான். இமைக்கா நொடிகளில் வாயாடியாக வந்து கவர்ந்தவர், இந்த படத்தில் சைகை மொழியில் பேசி நெகிழச் செய்கிறார். சிறப்பான நடிப்பு மானஸ்வி.