twitter
    Tamil»Movies»Tamizh Padam 2.0»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • காட்சிக்கு காட்சி உள்ளூர் சினிமா முதல் ஹாலிவுட் சினிமா வரை நையாண்டி செய்திருக்கிறார்கள். பழைய தேவர் மகன், லேட்டஸ்ட் கபாலி, அதுக்கு சீனியரான மெட்ராஸ், வேதாளம், வீரம், விவேகம், துப்பாக்கி, வேட்டையாடு விளையாடு, விஸ்வரூபம், வேலையில்லா பட்டதாரி, பாகுபலி, வால்டர் வெற்றிவேல் என 30க்கும் அதிகமான படங்களின் காட்சிகளை கேலி செய்திருக்கிறார் இயக்குனர் அமுதன். இதுகூட பரவாயில்லை... இன்னும் திரைக்கே வராத ரஜினியின் 2.0 படத்தையும் விட்டு வைக்கவில்லை தமிழ்படம் 2.

      ரஜினி, கமல், அஜீத், விஜய், விஷால், தனுஷ், சூர்யா, ஸ்ருதிஹாசன், ஜெனிலியா, ரித்விகா எம்.ஜி.ஆர்., டி.ராஜேந்தர் வரை வகை தொகை இல்லாமல் கலாய்த்திருக்கிறார்கள். சினிமா நடிகர்கள் மட்டுமல்ல நரேந்திர மோடி, ஓ.பன்னீர்செல்வம், தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களையும் விட்டு வைக்கவில்லை இயக்குனர். வச்சு செய்து விட்டார்கள்.

      நகைச்சுவை நடிகர் சதீஷுக்கு இதில் காமெடி வில்லன் ப்ரொமோஷன். மொத்தம் 15 கெட்டப்புகள். தேவர் மகன் நாசர், 16 வயதினிலே பரட்டையில் இருந்து 2.0 வில்லன் அக்ஷய் குமார் வரை அனைத்து வில்லன் கெட்டப்புகளையும் போட்டு லைக்ஸ்களை அள்ளுகிறார். சாகாவரம் பெற்ற வில்லன் பீயாராக அசத்தியிருக்கிறார். ஆனால் சிரிப்பு மூட்ட தவறிவட்டார்.