Tamil » Movies » Thaana Serndha Koottam » Critics Review

தானா சேர்ந்த கூட்டம் (U/A)

ரசிகர்கள் கருத்து

வெளியீட்டு தேதி

12 Jan 2018
விமர்சகர்கள் கருத்து ரசிகர்கள் கருத்து

tamil Filmibeat movies

80-களில் நடக்கும் கதை என்பதால் கதைக்களத்துடன் தொடர்புடைய 'வறுமையின் நிறம் சிவப்பு' படத்தின் போஸ்டர், 'பூவிழி வாசலிலே' போஸ்டர், 'கமல்ஹாசன் ரசிகர் மன்ற' போர்டு, கொஞ்சம் பழைய வீடுகள், பழைய மாடல் டெலிபோன் எனக் காட்டியிருக்கிறார் ஆர்ட் டைரக்டர் கிரண். மற்றபடி, ஓரளவுக்கு 80-களின் உணர்வைக் கொடுப்பது லைட் டோனில் காட்சிப்படுத்திய தினேஷ் கிருஷ்ணனின் கேமரா. ஒவ்வொரு காட்சிக்கும் பொருந்துமாறு சூர்யாவின் செயல்களுக்கு ஏற்ப, 'தில்லுமுல்லு', 'நாயகன்', 'சபதம்' ஆகிய பட போஸ்டர்களையும் காட்டுவது செம. இவற்றில் 'சபதம்' திரைப்படம் 1970-களின் தொடக்கத்தில் வெளிவந்தது. காலகட்டத்துக்கு தொடர்பில்லாத அந்த போஸ்டரை தவிர்த்திருக்கலாம்.


சில நிமிடங்களே வரும் ஆனந்தராஜ், ஆர்.ஜே.பாலாஜி, யோகிபாபு, சூர்யா கூடவே வரும் சத்யன் ஆகியோரின் காமெடிகள் அந்தளவுக்கு எடுபடவில்லை. சீரியஸான காட்சியின் போது சிரிக்க வைக்கும் தம்பி ராமையாவே பெட்டர் ஆகியிருக்கிறார். சூர்யா, ரம்யா கிருஷ்ணன் வசனங்கள் தான் லைட்டாக ஸ்மைல் செய்ய வைக்கின்றன. செந்திலுக்கு காமெடி வசனங்கள் எதுவும் இல்லை என்றாலும் அவரை ஸ்பெஷலாக பயன்படுத்தி இருக்கிறார்கள். பெட்ரோமாக்ஸ் லைட்டை பார்த்தால் மேண்டிலை உடைப்பது, வாழைப்பழ காமெடி, ஒரு வெற்றிலை ஒரு பாக்கு காமெடி என அவரது பழைய காமெடிகளை நினைவுபடுத்தும் விதமாகக் காட்சிகளை வைத்திருப்பது ரசிக்க வைக்கிறது.

சில வருடங்களுக்குப் பிறகு செம ஸ்டைல் வின்டேஜ் சூர்யாவாக திரும்பி இருக்கிறார் சூர்யா. சூர்யா குறும்பாகப் பேசும் வசனங்களுக்கு தியேட்டரில் செம அப்ளாஸ். கெத்தாக 'ஜான்சி ராணி சி.பி.ஐ ஆபிஸர்' என ஐ.டி கார்டு நீட்டுவது, போலீஸிடம் காட்டிக்கொண்டு பதறும் காட்சிகள், நிஜ ஐ.டி.ரெய்டு நடக்கும் இடத்திற்கே தவறுதலாகப் போய் அப்புறம் வழிவது என ரம்யா கிருஷ்ணன் வழக்கம்போல் அசத்தல் பெர்ஃபார்மன்ஸ். வழக்கமான ஐயர் வீட்டுப் பெண்ணாக 'அபச்சாரம்' சொல்லாமல் கீர்த்தி சுரேஷ் ஃபோர்ஜரி லேடியாக ஈர்க்கிறார். போலீஸ் அதிகாரியாக அலட்டல் இல்லாமல் நடித்த்திருக்கும் கார்த்திக், சி.பி.ஐ அதிகாரியாக சுரேஷ் மேனன் ஆகியோரும் அசத்தி இருக்கிறார்கள்.

அனிருத்தின் துள்ளலான இசையில் 'சொடக்கு' பாடலுக்கு தியேட்டரில் செம விசில். 1980-களின் கதை என்பதால் பின்னணி இசையிலும் நிதானம் காட்டியிருக்கிறார் அனிருத். ஶ்ரீகர் பிரசாத்தின் எடிட்டிங்கில் படம் ஷார்ப்பாக கட்டாகி இருக்கிறது. க்ளைமாக்ஸ் சப்பென்று முடிவது தமிழில் சில மாற்றங்கள் செய்திருக்கிறேன் எனக் கூறி விக்னேஷ் சிவன் கொடுத்த முரட்டு பல்ப். போலி சி.பி.ஐ ரெய்டு, ராபின்ஹூட் கதை என வேற லெவலில் இருந்திருக்க வேண்டிய படம் டொக்கான இரண்டாம் பாதியால் மல்லாக்கப் படுத்திருக்கிறது. செம ஸ்டைல் சூர்யாவைப் பார்க்க நிச்சயமாக இந்தப் படத்துக்குப் போகலாம். 'தானா சேர்ந்த கூட்டம்' - தியேட்டர்ல வரணுமே கூட்டம்..!

Buy Movie Tickets
 

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil