twitter
    Tamil»Movies»Thadam»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • தடையற தாக்க மூலம் தடம் பதித்த மகிழ் திருமேணி, இந்த படத்தின் மூலம் மீண்டும் தனது தடத்தை அழுத்தமாக பதித்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். ஆரம்பம் முதல் க்ளைமாக்ஸ் வரை விறுவிறுப்பான திரைக்கதை அமைத்து, பார்வையாளர்களை சீட்டின் நுனியிலேயே அமர வைக்கிறார். நல்ல க்ரைம் திரில்லர் படம் பார்த்த அனுபவம் கிடைக்கிறது. மகிழ்ச்சி மகிழ்.

      தமிழ் சினிமாவில் இரட்டையர் கதை ஒன்றும் புதிதல்ல. இரட்டையரில் ஒருவர் தப்பு செய்ய, மற்றொருவர் போலீசில் சிக்கிக் கொள்ள என ஏற்கனவே இதேபோன்ற இரட்டையர் படங்கள் பல வந்திருக்கிறது. ஆனாலும், தனது திரைக்கதை மூலம் படத்தை புதிதாக காட்டி இருக்கிறார் மகிழ் திருமேனி. இருவரில் யார் குற்றவாளி என பார்வையாளர்கள் எளிதில் யூகித்துவிட முடியாத அளவுக்கு, நிறைய கதாபாத்திரங்களைக் கொண்டு, டிவிஸ்ட் மேல் டிவிஸ்ட் வைத்திருப்பது பாராட்டுக்குரியது.

      படத்தில் மூன்று கதாநாயகிகள். அதில் வித்யா பிரதீப்புக்கு மட்டும் தான் நடிப்பதற்கு வாய்ப்பு. பெண் உதவி ஆய்வாளராக மிடுக்காக வரும் அதேவேளையில், வழக்கை முடிக்க முடியாமல் திணறும் போது கவனம் ஈர்க்கிறார்.