Tamil » Movies » Thala 60 » Story

தல 60

(2020)

ரசிகர்கள் கருத்து

வெளியீட்டு தேதி

2020
கதை
இயக்குனர் ஹச் வினோத், அஜித் குமார், தயாரிப்பாளர் போனி கபூர் கூட்டணியில் உருவான நேர்கொண்ட பார்வை திரைப்படத்தினை தொடர்ந்து இரண்டாவது முறையாக இக்கூட்டணியில் உருவாகவிருக்கும் பெயரிடப்படாத திரைப்படம் அஜித் குமாரின் "தல 60" திரைப்படமாகும்.

இத்திரைப்படத்தில் நாயகன், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் உறுதியான நிலையில் தல 60 படத்திற்கும் இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா இசையமைப்பார் என எதிர்பார்க்க படுகிறது.

படத்தின் தகவல்கள்

தல 60 திரைப்படம் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் ரிலீஸுக்கு பின்னரே தொடங்கவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. ஆகஸ்ட் 10 2019-ல் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் ரிலீஸுக்கு பின்னர், 2019 ஆகஸ்ட் மாதம் 29-ம் தேதியில் தல 60 படத்திற்கு பூஜை போட திட்டமிட்டுள்ளார்களாம் படக்குழுவினர்.

தல 60 திரைப்படத்தின் கதையம்சம் மற்றும் திரைக்கதை வடிவமைப்பானது இயக்குனர் ஹச் வினோத், நாயகன் அஜீத்துக்காகவே மிகுந்த கவனமுடன் அதிரடி மற்றும் திரில்லர் கதையாக எழுதியுள்ளாராம். மேலும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் வெளிநாடுகள் மற்றும் சென்னையில்  நடக்கவுள்ளதாகவும், அஜித் இத்திரைப்படத்தில் காவல் துறை அதிகாரியாக நடிக்கவிருப்பதாக படக்குழுவினரால் தெரியவந்துள்ளது.

தல 60 திரைப்படத்தின் இயக்குனர் வினோத் இயக்கத்தில் வெளியான தீரன் திரைப்படம் போலவே இத்திரைப்படமும் அதிரடி மற்றும் குற்றங்களை சார்ந்த திரில்லர் கதைக்களத்தை கொடுள்ளது என தெரியவந்துள்ளது.

மேலும் தல 60 திரைப்படத்தினை பற்றிய முக்கிய தகவல்கள் அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிக்கப்படும்.
 
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more