twitter
    Tamil»Movies»Thani Oruvan»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • 'ரீமேக் படங்களின் ராஜா' என சற்று கிண்டலாகவே விளிக்கப்பட்ட மோகன் ராஜா, முதல் முறையாக தன் ஒரிஜினல் ஸ்க்ரிப்டோடு தனி ஒருவனாக வந்திருக்கிறார். ரீமேக் படமாக இருந்தாலும், அதை நமக்கேற்ற சுவாரஸ்யங்களோடு தர ஒரு தனித் திறமை வேண்டும். அதில் ராஜா நிஜமாகவே கில்லாடிதான். இந்த ஒரிஜினல் தனி ஒருவனிலும் தன்னை ஒரு 'ராஜா'வாக நிரூபித்திருக்கும் அவருக்கு முதல் வாழ்த்து!

      சமீபத்தில் வந்த படங்களிலேயே மிகச் சிறந்த திரைக்கதையுடன் வந்திருக்கும் ஆக்ஷன் த்ரில்லர் படம் என்றால் அது தனி ஒருவன்தான் என்றால் அதில் மிகையில்லை.

      எந்தக் குறையையும் ரசிகன் உணர முடியாத அளவுக்கு ஒரு திரைக்கதையை எழுதி, அதில் சிறு சமரசமும் இல்லாமல் படமாக்கியிருக்கும் ராஜா, வசனத்திலும் தனித்துவம் காட்டியிருக்கிறார் (சுபாவுடன் இணைந்து). சில படங்களைப் பற்றி எழுதும்போது தொழில்நுட்ப நேர்த்தி என்று பொத்தாம் பொதுவாகக் குறிப்பிடுவார்கள். ஆனால் உண்மையிலேயே அதற்கு தகுதியான படம் இதுதான் என்பதை, கிராபிக்ஸ் துணை அவ்வளவாக இல்லாமலேயே நிரூபித்திருக்கிறார் ராஜா.