twitter
    Tamil»Movies»Thimiru Pudichavan»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • எல்லா நடிகர்களுக்குமே போலீஸ் அதிகாரி பாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை நிச்சயம் இருக்கும். அந்த ஆசையில் விஜய் ஆண்டனி தேர்ந்தெடுத்த இந்த கதை அவரை அடுத்தக்கட்டத்துக்கு அழைத்து செல்லுமா என்பது கேள்விக்குறி தான். ஆக்ஷன் காட்சிகளில் போலீஸ் கெத்து காட்டியிருக்கும் விஜய் ஆண்டனி, எமோஷன் காட்சிகளில் நெகிழ வைக்கிறார். ஆனால் வித்தியாசமாக முயற்சி செய்வதாக நினைத்து பல காட்சிகளில் தேவையில்லாத விஷப்பரீட்சைகளை செய்திருக்கிறார். இது அவரது ரசிகர்களை நிச்சயம் திருப்திப்படுத்தாது.

      போலீஸ் எஸ்.ஐ.யாக கெத்து காட்டுகிறார் நிவேதா பெத்துராஜ். ஒரு சில இடங்களில் கவர்கிறார். பல இடங்களில் கடுப்பேற்றுகிறார். இந்துஜாவுக்கு இந்த படத்தில் வித்தியாசமான கதாபாத்திரம். நிறைவாக செய்திருக்கிறார்.

      வில்லனுக்கு கொடுக்கப்பட்ட பில்டப்புகளை எல்லாம் தவிடி பொடியாக்கிவிடுறார் மீசை பத்மாவாக நடித்திருக்கும் ஒட்டு மீசை' சாய் தீனா. வெறும் வாய்சவடால் மட்டுமே வில்லன் கதாபாத்திரத்திற்கு. வில்லன் டம்மியாகிவிடுவதால், படமும் டம்மியாகிவிடுகிறது.

      காமெடி என்ற பெயரில் சாமிநாதன் செய்யும் அட்ராசிட்டிகளை சகித்துக்கொள்ள முடியவில்லை. விஜய் ஆண்டனியின் இசையில் திருமிருக்கே பிடிச்சவன் பாடல் மட்டும் ஓ.கே. இம்முறை பின்னணி இசையிலும் கோட்டைவிட்டிருக்கிறார் விஜய் ஆண்டனி. எடிட்டர் வேலையும் அவரே செய்திருப்பது வேண்டாத வேலையாகவே தோன்றுகிறது.

      வில்லனை என்கவுன்டர் செய்ய வருகிறார் விஜய் ஆண்டனி. அப்போது கூலாக சாப்பிட்டு கொண்டிருக்கும் தீனா, "எனக்காக ஒரு கோழி செத்திருக்கு. அத சாப்பிட்டுட்டு நான் சாகுறேன்", என வசனம் பேசுகிறார். இதை கேட்டு, வில்லன் சாப்பிட்டு முடிக்கும் வரை காவல் காக்கிறார் விஜய் ஆண்டனி. முடியலப்பா சாமி.

      கமர்சியல் மசாலா நெடியை குறைத்து, திரைக்கதையில் இன்னும் நிறைய கவனம் செலுத்தி இருந்தால் இந்த திமிரு புடிச்சவனை பார்வையாளர்களுக்கும் பிடிச்சிருக்கும்.