twitter
    Tamil»Movies»Thiruttu Payale 2»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • திரைக்கதையில் திருட்டுப் பயலே அளவுக்கு 'கிக்' இல்லை என்றாலும், விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லை என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். ஆனால் இடைவேளைக்குப் பிறகு பாபிக்கும் பிரசன்னாவுக்கும் இடையிலான பூனை - எலி கண்ணாமூச்சு சலிப்படைய வைக்கிறது. காட்சிகளையும் எளிதில் யூகிக்க முடிகிறது. நேர்மையான போலீசாக இருந்து மெல்ல மெல்ல வழுவி, பணத்தாசை பிடித்த நல்ல திருட்டுப் பயலாக மாறும் வேடத்தை சரியாகவே செய்திருக்கிறார் பாபி சிம்ஹா. அவருக்கு சற்றும் சளைக்காத சைபர் கிரிமினலாக பிரசன்னா. நடுத்தர குடும்பத்துப் பெண்கள் பேஸ்புக் அடிமைகளாக மாறும்போது என்ன நடக்கும் என்பதை அமலா பால் கச்சிதமாக வெளிப்படுத்தியிருக்கிறார். அளவான கவர்ச்சி, இயல்பான நடிப்பு என சரியான கலவை. எம்எஸ் பாஸ்கர், விவேக், ரோபோ சங்கர் என யாரும் மிகையாக நடிக்காதது ஆறுதல். சுசி கணேசன் எதற்கு வருகிறார் என்று அவருக்கே தெரியவில்லை போலிருக்கிறது. செல்லத்துரையின் ஒளிப்பதிவு இதம். நீண்ட நாட்களுக்குப் பிறகு வித்யாசாகர். ஏமாற்றவில்லை, குறிப்பாக பின்னணி இசையில். சமூக வலைத் தளங்களின் எதிர்மறை பாதிப்புகளை ஓரளவு ஆராய்ச்சி செய்து, உண்மைக்கு வெகு நெருக்கமான திரைக்கதையாக்கியிருக்கிறார் இயக்குநர். இம்மாதிரி முயற்சிகள் இப்போதைய சூழலுக்கு அவசியமும் கூட.