twitter
    Tamil»Movies»Thoongaavanam»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • ப்ரெஞ்ச் மொழிப் படமான ஸ்லீப்லெஸ் நைட் -ன் (Nuit Blanche) அப்பட்டமான தழுவல் தூங்கா வனம். அப்பட்டமான என்றால் எந்த அளவுக்கு தெரியுமா... சில காட்சிகளில் கேமரா கோணங்களைக் கூட மாற்றாத அளவுக்கு, என்பது ஒரிஜினல் பார்த்தவர்களுக்குப் புரியும்.

      ஆனாலும் ஓரளவு திருந்தச் செய்திருக்கிறார்கள். 'பிற நாட்டு கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்' என்ற வகை தழுவல் இது.

      எந்த ரீமேக் என்றாலும் அதில் கமல் தன் பாணியில் எதையாவது சேர்ப்பார், உன்னைப் போல் ஒருவன் மாதிரி. ஆனால் இதில் அப்படி எதையும் செய்யவில்லை.

      இயக்குநராக அறிமுகமாகியுள்ள ராஜேஷ் எம் செல்வாவும் கமலும், 'எதற்கு பெரிய ரிஸ்க்' என நினைத்து இந்தக் கதையைத் தேர்வு செய்து திரைக்கதை அமைத்திருக்கிறார்கள்.

      குறிப்பாக அந்த சமையலறை சண்டைக் காட்சியில் கமல் மற்றும் த்ரிஷா இருவருமே கலக்கியிருக்கிறார்கள். த்ரிஷாவுக்கு இது குறிப்பிடத்தக்க படம்.

      அட, அதுக்குள்ள முடிஞ்சிருச்சே எனும் அளவுக்கு படத்தின் நீளத்தைக் குறைத்திருப்பது நல்ல டெக்னிக். இல்லாவிட்டால் இந்தப் படம் பெரிய கொட்டாவியை வரவழைத்திருக்கும். அந்த வகையில் தப்பித்தது!