twitter
    Tamil»Movies»Thozha (Thola)»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • ஃபீல் குட் படம் என்று ஆங்கிலத்தில் ஒரு பதம் இருக்கிறது. அதாவது நேர்மறையான சிந்தனைகளைத் தூண்டும், மனதை நல்லவிதமாக வைத்திருக்கும் ஒரு படம். அப்படி ஒரு படம் 'தி இன்டச்சபிள்ஸ்'. அந்த பிரெஞ்சுப் படத்தைத்தான் தமிழில் தோழாவாகவும் தெலுங்கில் ஊபிரியாகவும் ரீமேக்கியிருக்கிறார்கள். தமிழில் அந்த ஃபீல் குட் மனநிலை கிடைத்ததா... பார்க்கலாம்!

      ரீமேக் என்றாலும், அதை ஓரளவு நேர்மையாகவே செய்திருக்கிறார் இயக்குநர் வம்சி. தெலுங்கு சாயலில் எடுத்து கொல்லப் போறாங்க.. என்ற நினைப்போடு போனால்... ம்ஹூம்... பக்கா தமிழ்ப் படம்.

      நாகார்ஜுனா என்ற ஆஜானுபாகுவான ஒரு ஆக்ஷன் ஹீரோவை சக்கர நாற்காலியிலேயே வலம் வர வைத்திருக்கிறார்கள். ஆனாலும் தன் முக பாவனைகளிலேயே அனைத்தையும் சாதித்து மனசுக்கு நெருக்கமாகிறார் நாகார்ஜுனா. உதயம் காலத்து அவரது ரசிகர்கள் மெய்சிலிர்த்துப் போய் அவரை ரசிப்பதை அரங்கில் பார்க்க முடிந்தது.

      விவேக், பிரகாஷ் ராஜ் சில காட்சிகளில் வந்தாலும் மனசில் நிற்கிறார்கள்.

      படத்தின் முக்கிய பலம் வசனங்கள். எழுதிய ராஜு முருகன், முருகேஷ் பாபு இருவருமே பத்திரிகையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

      படத்தின் நீளம், கார்த்தியின் திருட்டு கேரக்டர் போன்றவை கொஞ்சம் உறுத்தலாக இருந்தாலும், தெளிவான, சுவாரஸ்யமான திரைக்கதைக்கு முன் அவை காணாமல் போகின்றன.

      தோழா.. நிச்சயம் பார்க்கலாம்!