twitter
    Tamil»Movies»To Let»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • சென்னை பெருநகரில் வாடகை வீடு எனும் நரகத்தில் சிக்கி தவிக்கும் பல ஆயிரம் குடும்பங்களில் நிலையை, ஒரு குடும்பத்தின் திண்டாட்டத்தை முன்மாதிரியாகக் காட்டி பதிவு செய்திருக்கிறது டூ லெட்.

      அதே சமயம், படத்தில் யாரையும் குற்றம் சொல்லவும் இல்லை. ஹவுஸ் ஓனர்களாக வரும் ஒவ்வொருவரும் உண்மையான பாத்திரங்கள். சொந்த வீடு வைத்திருக்கும் ஒரே காரணத்தால், அது இல்லாதவர்களை ஏளனமாக நடத்துபவர்கள் இங்கு ஏராளம் என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் செழியன். பல இடங்களில் கைத்தட்டல் வாங்கி, சிரிக்க வைக்கின்றார் இயக்குனர். படத்தில் நடிகர்கள் என யாரும் இல்லாதது தான் பெரிய பலம். சந்தோஷ், ஷீலா, தருண், ஆதிரா என அனைவருமே நடிகர்களாக இல்லாமல், அப்படியே வாழ்ந்திருக்கிறார்கள். இதனால் படத்துடன் நம்மை எளிதாக பொருத்திக்கொள்ள முடிகிறது.