twitter
    Tamil»Movies»Traffic Ramasamy»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • மேயர் 'கும்பூ' கோவிந்தன், தொழிலதிபர் ஸ்ரீனிவாச ரெட்டி, அமைச்சர் வெங்காயமண்டி வெங்கடேசன் என வில்லன்களின் பெயர்களை அற்புதமாக மேட்ச் செய்திருக்கிறார் அறிமுக இயக்குனர் விக்கி. அதேபோல, அந்த பாத்திரங்களுக்கான நட்சத்திர தேர்வும் அருமை.

      எஸ்.ஏ.சந்திரசேகர் டிராப்பிக் ராமசாமியாகவே மாறியிருக்கிறார். நடை.உடை,பாவனை என நாம் பார்த்துகொண்டிருக்கும் டிராப்பிக் ராமசாமியை கண்முன் நிறுத்துகிறார். குரலில் மட்டும் தான் எஸ்.ஏ.சி. தெரிகிறார்.

      ஒரு போராளியின் மனைவி கதாபாத்திரத்துக்கு அவ்வளவு நியாயம் சேர்த்திருக்கிறார் ரோகினி. அதுபோல மற்ற நடிகர், நடிகைகளும் தங்கள் பாத்திரங்களை சரியாக செய்திருக்கிறார்கள்.

      ஆனால் முதற்பாதியில் இருந்த யதார்த்தம், பின்பாதியில் முற்றிலும் தளர்ந்துவிடுகிறது. அந்த குத்துப்பாடலை தவிர்த்திருக்கலாம். பாடலும், வரிகளும் ஓகே. ஆனால் காட்சிப்படுத்தியதில் சொதப்பல். நீதிமன்றக் காட்சிகள் யதார்த்தத்தை மீறி எடுக்கப்பட்டுள்ளன. அதுவும் நீதிபதி இருக்கையில் அமர்ந்துகொண்டு அம்பிகா செய்யும் அலப்பறைகள் கொஞ்சம் ஓவர். அவ்வளவு பாதுகாப்பு மிகுந்த நீதிமன்ற வளாகத்துக்குள், ஒருவர் துப்பாக்கியுடன் நுழைந்து, நீதிபதியை நோக்கி சுடுவதெல்லாம் டூடூ மச்.