TamilbredcrumbMoviesbredcrumbUchakattambredcrumbCritics Review

    விமர்சகர்கள் கருத்து

    • ஒரு சின்ன புள்ளியை வைத்து, அழகான கோலம் போட்டிருக்கிறார் சுனில் குமார் தேசாய். கன்னடத்தில் இருந்து டப் செய்யப்பட்ட படம் என்றாலும், சிங்கம் 3 வில்லன் தாகூர், நம்ம கபாலி தன்ஷிகா, அஜித் வில்லன் கபூர் சிங், ஆடுகளம் கிஷோர், தடம் தன்யா ஹோப் என அனைவருமே நாம் பார்த்த முகம் என்பதால், டப்பிங் படம் பார்க்கும் உணர்வு ஏற்படவில்லை.

      முதல் காட்சியில் இருந்து க்ளைமாக்ஸ் வரை படம் விறுவிறுப்பாக நகர்கிறது. ஹீரோ, வில்லன், ஸ்டன்ட்மேன் என படத்தில் வரும் அனைவருமே ராட்சசன் உருவத்தில் இருக்கிறார்கள். ஏதோ கிம்முக்குள் போய்விட்டு வெளியே வந்தது போல் போன்ற உணர்வு தான் முதலில் ஏற்படுகிறது. இதனால் ஆக்ஷன் காட்சிகள் எல்லாம் மிக பிரமாண்டமாக இருக்கிறது.