சரவணன் இருக்க பயமேன் (U)

ரசிகர்கள் கருத்து

வெளியீட்டு தேதி

12 May 2017
கதை
சரவணன் இருக்க பயமேன் இயக்குனர் எழில் இயக்கிய, காதல், நகைச்சுவை திரைப்படம். இத்திரைப்படத்தில் உதயநிதி, ரெஜினா கேசன்ட்ரா, ஸ்ருஷ்டி டாங்கே, சூரி மற்றும் ஆர் கே சுரேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தினை உதயநிதி தனது ரெட் ஜெய்ன்ட் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார்.

கதை : 

சரவணன் (உதயநிதி) வெற்றிக்கு ஒரே பிள்ளை. தேன்மொழி (ரெஜினா) குடும்பமும் சரவணன் குடும்பமும் நெருங்கிய உறவினர்கள். இருப்பினும், சரவணனும் தேன்மொழியும் சிறுவயதிலிருந்தே மோதிக்கொள்ளகின்றனர். தேன்மொழி குடும்பம் வேறு ஊருக்கு இடம் மாறி சென்று, சில வருடங்களுக்கு பிறகு மீண்டும் தன் சொந்த ஊருக்கு திரும்புகின்றனர். 

சூரி பணம் சம்பாதிக்க நினைத்து மதன் பாபு நடத்தும் தேசிய கட்சியில் நுழைந்து தமிழ்நாட்டில் தலைவராகும் போது சில சிக்கலால் அவர் வெளிநாடு செல்ல நேரிடுகிறது. பின் உதயநிதி தன் நண்பர்களான யோகிபாபு டீமுடன் சேர்ந்து அரசியலில் இறங்குகிறார்.

இதற்கிடையில் தன் கல்லூரி தோழியாக வரும் சிருஷ்டி, சரவணன் மீது காதல் கொள்கிறார். ஆனால் தன் காதலை சொல்லாமலேயே ஒரு விபத்தில் இறந்துபோகிறார்.

சில வருடங்களுக்கு பின் இந்தியா திரும்பும் சூரிக்கு இங்கு பேரதிர்ச்சி காத்திருக்கிறது. ரெஜினாவின் சித்தியான ஜாங்கிரி மதுமிதா தன் கணவர் சூரிக்கு எதிராக உதயநிதிக்கு தேவையான உதவிகளை செய்கிறார்.

தேன்மொழி, சூரியின் ஏற்பாட்டில் மன்சூர் அலிகான் மகனாக வரும் சாம்ஸை திருமணம் செய்துகொள்ள ஒப்புக்கொள்கிறார்.

அரசியல், காதல் என இருக்கும் சரவணன் வாழ்க்கையில் வெற்றி பெற ஒரு ஆவி வந்து உதவி செய்கிறது. ஒரு கட்டத்தில் இரு குடும்பத்திற்கும் இடையில் சில பிரச்சனைகளும் கெளம்புகின்றது. சரவணன் குடும்பம் அந்த பிரச்சனைகளிலிருந்து எவ்வாறு மீள்கிறது, சரவணனுக்கு உதவி செய்யும் அந்த ஆவி யார், அந்த ஆவிக்கும் சரவணனுக்கும் என்ன தொடர்பு, சரவணன் தன் காதலில் வெற்றி பெற்றாரா..? என பல கேள்விக்கு பதிலே இப்படத்தின் மீதிக்கதை. 
Buy Movie Tickets