twitter
    Tamil»Movies»Uppu Karuvadu»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • ஒரு சுமாரான முதல் படம் எடுத்த இயக்குநர்... அவரது அடுத்த படம் பாதியில் நின்று போகிறது. சினிமாவைத் தவிர எதுவும் தெரியாத அந்த இளைஞர் தன்னை நம்பி நிற்கும் நான்கு பேருடன் சேர்ந்து வாய்ப்புக்கு அலைகிறார். அப்போது கடல்புரத்தில் உள்ள ஒரு பெரிய மனிதர் அவர்களை வைத்து படம் தயாரிக்க முன்வருகிறார், ஒரு நிபந்தனையுடன். அதாவது ஹீரோயின் அவர் மகளாக இருக்க வேண்டும்!

      கருணாகரனுக்கு மிகப் பெரிய வாய்ப்பு. பெரிதாக அவர் உணர்ச்சிகளைக் கொட்டி நடிக்கவில்லை என்றாலும், மாரிமுத்துவிடம் ஆவேசமும் தன்னிரக்கமும் கலந்து கட்டி பேசும் நான் ஸ்டாப்பாக வசனங்கள்... அபாரம். "சமூகத்தை அவமானப்படுத்துவதாகக் கொந்தளிக்கிறீங்களே..." என்று ஆரம்பித்து எந்தெந்த அநியாயங்களையெல்லாம் கைகட்டி வாய் மூடி வேடிக்கைப் பார்க்கிறது இந்த சமூகம் எனப் பட்டியலிடும் அந்தக் காட்சி சாட்டையடி!

      ராதா மோகனின் விறுவிறு திரைக்கதை, பொன் பார்த்திபன் வசனங்கள், மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவு, ஜெய்யின் ஷார்ப் கட்... உப்புக் கருவாட்டை சுவையாக்கிய சமாச்சாரங்கள் இவைதான்.

      லேசா உப்புக் கரிச்சாலும், டேஸ்ட் நல்லாருக்கு!