twitter
    Tamil»Movies»Uriyadi 2»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • பேராசை பிடித்த தொழிலதிபர் ராஜ்பிரகாஷ், செங்கதிர்மலையின் இயற்கை வளத்தை அழித்து தாமிர தொழிற்சாலை ஒன்றையும் திறக்க நினைக்கிறார். ஆனால் அதற்கு கால அவகாசம் அதிகம் தேவைப்படும் என்பதால், அதிக லாபம் பார்ப்பதற்காக தனது ரசாயன தொழிற்சாலையின் உற்பத்தியை இரு மடங்காக்குகிறார். இதற்காக உள்ளூர் எம்பி தமிழ்குமரன் மற்றும் சாதிக்கட்சி தலைவர் செங்கை குமார் ஆகியோருக்கு லஞ்சம் கொடுத்து கைக்குள் போட்டுக்கொள்கிறார்.

      ஆரம்பத்திலேயே குறிப்பிடப்பட்டிருக்க வேண்டிய ஒரு பெயர் கோவிந்த் வஸந்தா. படத்தின் மற்றொரு ஹீரோ இவர் தான். படத்தின் ஆரம்பத்தில் இருந்து க்ளைமாக்ஸ் வரை இவரது இசை ராஜ்யம் தான். இன்டர்வெல் பிளாக் வரையிலான முதல் பாதியில், ஹார்ட்பீட்டை ஏற்றுகிறார். இரண்டாம் பாதியில் வரும் 'இறைவா நீ இருக்கிறாயா?' பாடலில் உருகவைத்துவிடுகிறார். 'வா வா பெண்ணே' பாட்டு காதுகளில் ரீக்காரமிடுகிறுது. க்ளைமாக்ஸ் காட்சியின் போது ஒலிக்கும் 'அக்னி குஞ்சொன்று கண்டேன்' நரம்புகளை முறுக்கேற செய்கிறது.

      தமிழ் சினிமாவில் இது இளைஞர்களின் காலம். உறியடி 2 இன்றைய இளைஞர்களுக்கான தரமான அரசியல் படம். பேராசை பிடித்த சுயநல அரசியல்வாதிகளுக்கு சரியான சம்மட்டி அடி, இந்த உறியடி 2.