விமர்சகர்கள் கருத்து

  • முதல் படத்தை திரில்லர் கதையாக எடுத்திருக்கிறார் இயக்குனர் ஆசிப் குரைஷி. நல்ல கதை கரு தான். ஆனால் திரைக்கதையில் தெளிவு இல்லாததால் சுவாரஸ்யம் குறைந்துவிடுகிறது. அதேபோல பாத்திரப்படைப்புகளிலும் நிறைய குழப்பங்கள் இருக்கின்றன. மற்றபடி முதல் படத்திலே இந்த அளவுக்கு டெக்னாலஜி விஷயங்களை ஆராய்ந்து முயற்சித்திருப்பதற்காக இயக்குனருக்கு பாராட்டுகள்.

   பல ஆண்டுகளாக வெற்றிக்காக போராடிக்கொண்டிருக்கும் நடிகர் உதயாவிற்கு இந்த படம் வெற்றியை தருமா என்பது சந்தேகமே. மனநலம் பாதிக்கப்பட்ட மனிதனாக நிறைய மெனக்கெடல்களுடன், வித்தியாசமாக நடிக்க முயற்சித்திருக்கிறார். ஆனால் அது பல இடங்களில் ஓவர் ஆட்டிங் ஆகிவிடுகிறது.

   ஸ்ரீமனின் சீரியஸ் நடிப்பு படத்தில் ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது. அதேசமயம் கோவை சரளாவுடன் சேர்ந்து அவர் செய்யு காமெடி, கடுப்பேத்துறாங்க மை லார்டு மொமன்ட். இவர்களை தவிர, நாசர், எம்.எஸ்.பாஸ்கர், குட்டி பத்மினி, மனோபாலா, தனஞ்ஜெயன், ஆடம்ஸ் என நிறைய பேர் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே தங்கள் பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

   பாலாஜி ரங்காவின் ஒளிப்பதிவில் கொடைக்கானல் காட்சிகளும், சேசிங் காட்சிகளும் சிறப்பு. எடிட்டர் சத்ய நாராயணா இன்னும் கொஞ்சம் கத்தரித்திருந்தால் படத்தில் சுவாரஸ்யம் அதிகரித்திருக்கும்.

   மொத்தத்தில் இந்த மகாராஜாவுக்கு ரசிகனின் உத்தரவு என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.