twitter
    Tamil»Movies»Vada Chennai»Critics Review

    விமர்சகர்கள் கருத்து

    • திரைக்கதை அமைப்பதில் தான் ஒரு வல்லவர் என்பதை நிரூபித்திருக்கிறார் வெற்றிமாறன். முதல் பாதி முழுவதும் முன்னுக்கு பின்னாக காட்சிகள் நகர்கின்றன. இடைவேளை வரை கதாபாத்திரங்களின் அறிமுகமே நிறைந்திருக்கிறது. ஒவ்வொரு அத்தியாயமாக கதை சொல்லப்படுகிறது.

      இதனால் முதல் பாதி வரை படத்துடன் ஒன்ற முடியவில்லை. ஆனால் இரண்டாம் பாதி அதை அப்படியே புரட்டிப்போட்டு, திரையில் இருந்து கண்களை அகலவிடாமல் செய்கிறது. அதுவும் அமீர் வரும் காட்சிகள் செம மாஸ்.

      வெற்றிமாறனின் மனதில் வடசென்னையின் பிம்பம் எப்படி பதிந்திருக்கிறது என்பதை இந்தப் படம் உணர்த்துகிறது. ஒவ்வொரு கதாபாத்திரமும் அநாயசமாக கெட்டவார்த்தை பேசுகிறது. ஆண், பெண் என்ற விதிவிலக்கெல்லாம் இல்லை.

      வடசென்னை என்றாலே குப்பம், அடிதடி, சண்டை, ரவுடியிசம், கெட்டவார்த்தை என காட்டியிருப்பது ஏன் வெற்றிமாறன். அதுவும் படத்தில் வரும் ஒரே ஒரு கதாபாத்திரத்தை தவிர மற்றவர்கள் எல்லோரும் தப்புத்தப்பாக ஆங்கிலம் பேசுகிறார்கள். அதேபோல், ராஜீவ்காந்தி, எம்.ஜி.ஆர். போன்ற தலைவர்களின் மரணங்களைப் பதிவு செய்துள்ள இயக்குநர், ஆனால் அப்போது ஏற்படும் கலவரங்களில் வடசென்னை மக்கள் கடைகளைச் சூறையாடுவது போன்ற காட்சிகளைத் தவிர்த்திருக்கலாம். வடசென்னை மக்கள் பற்றி இப்படியான பிம்பம் சரிதானா?, தேவைதானா?

      முதலில் சொன்னது போல், தனது திறமையான திரைக்கதையால், இப்படி எந்த கேள்வியும் எழாதபடி பார்த்துகொள்கிறார் வெற்றிமாறன். இந்த படம் சொல்லும் செய்தி, வடசென்னை மக்கள் ரவுடியிசம் செய்வது தங்களுடைய நிலத்துக்கான போராட்டம் என்பதாகவே புரிந்துகொள்ள முடிகிறது.

      'இந்த பொண்ண உண்மையிலேயே காசி மேட்லருந்து புட்சிக்கின்னு வந்திங்களாடானு' ஆச்சர்யப்பட வைக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். எடுத்த எடுப்பிலேயே கெட்ட வார்த்தை பேசி, தனுஷுக்கு லிப்லாக் கொடுத்து என அவரும் தன் பங்குக்கு அட்ராசிட்டி செய்கிறார்.

      படத்தின் மிகப்பெரிய சர்ப்ரைஸ் அமீர். சமுத்திரகனிக்குகூட வடசென்னை பாஷை நான்சிங்கில் இருக்கிறது. ஆனால் அமீர் அச்சு அசலாக பொருந்துகிறார். ராஜன் கதாபாத்திரத்திற்கு அவ்வளவு நியாயம் செய்திருக்கிறார்.

      துரோகம், வன்மம், ரவுடியிசம், கத்தி, துப்பாக்கி, வெடிகுண்டு என ரத்தம் சொட்டச் சொட்ட வந்து நிற்கிறது வடசென்னை. இயக்குனர் வெற்றிமாறன் - நடிகர் தனுஷ் கூட்டணி மேலும் ஒரு வெற்றிக்கனியை பறித்திருக்கிறது.